August 23, 2014

மோடியைச் சந்தித்தனர் கூட்டமைப்பினர்! சந்திப்பு திருப்தி என்கிறார் சம்பந்தன்!

இந்திய பிரதமருடனான சந்திப்பு திருப்தி அளிப்பதாக இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்ட தமிழ் தேசியகூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.  ஈழத் தமிழர் விடயத்தில் இந்திய பிரதமர் ஆக்கப்பூர்வமாக செயற்படுவதற்கு தேவையான அனைத்து தகவல்களையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்திய பிரதமரிடம் விளக்கியுள்ளது.

சுமார் ஒரு மணித்தியாலமாக இடம்பெற்றிருந்த இந்த பேச்சுவார்த்தையின் போது தமிழ் தேசிய கூட்டமைப்புதமிழ் மக்கள் சந்திக்கின்ற அனைத்து பிரச்சினைகளையும் எடுத்தியம்பி இருக்கிறது.  இவை அனைத்தையும் செவிமடுத்த பிரதமர் நரேந்திரமோடி, விரைவில் தமிழ் மக்களுக்கு தேவையான தீர்வினை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.  அவர் தமிழ் மக்களை கைவிட மாட்டார் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

(இணைப்பு 1)
இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளனர். இச்சந்திப்பு இன்று சனிக்கிழமை முற்பகல் 10.00 மணியளிவில் நடைபெற்றது. சந்திப்பில் 13வது அரசியல் சட்டத்திருத்தம் குறித்து ஆராயப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றன.அதாவது தமிழர் தாயக நிலப்பரப்பான வடக்கு  மற்றும் கிழக்குக்கு கூடியளவு அதிகாரங்கள் கிடைக்க வேண்டும் என கூட்டமைப்பினரால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment