June 21, 2014

முஸ்லீம்கள் இலக்கு வைக்கப்படக் காரணம்?

அழுத்கமவினைத் தொடர்ந்து பல மாவட்டங்களில் இன்னும் இஸ்லாமிய சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டள்ளன. இவ் பத்தி எழுதப்படும் போது பாணந்துறையில்
இஸ்லாமியருக்கு செந்தமான தைத்த ஆடைகளுக்கு பிரபலமான நிறுவனம் ஒன்று தீக்கிரையாகிக் கொண்டுள்ளது. சிறீலங்கா காவல்துறையின் கருத்துப்படி மின்னொழுக்கு காரணம் அல்லது தீ தானாக கடைக்குள் மூட்டிக் கொண்டுள்ளது!!!! ( சில காலங்களுக்கு முன்னர் சிறீலங்கா அமைச்சர் ஒருவரின் மகனுக்கும் படை அதிகாரி ஒருவருக்கும் இடையிலான மோதலில் படுகாயமடைந்த படை அதிகாரி அரசின் அழுத்தம் காரணமாக நீதி மன்றில் எனக்கு நானே அடித்து காயப்படுத்திக் கொண்டேன் என வாக்குமூலம் அளித்தது நினைவூட்டத் தக்கது) இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களும் யாழ்மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்கள் மீது இனம்தெரிய? நபர்கள் தாக்குதல் மேற்கொண்டு மத ரீதியான பதற்றத்தை ஏற்படுத்த முனைந்துள்ளனர். இதே நேரம் கண்டி மற்றும் மலையகப்பகுதிகளில் ஆங்காங்கே தாக்குதல் முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டுள்ளதான செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளன.


நேற்று காலை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்று கூடல் கட்டடத் தொகுதியில் அண்மையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டிருந்த இஸ்லாமிய வழிபாட்டுத் தலம் மீது கழிவு எண்ணெய் ஊற்றப்பட்டு மத ரீதியான தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன் கடந்த இரவு நாவந்துறையில் உள்ள பள்ளிவாசல் ஒன்றும் அதே பாணியிலான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது அல்லது உள்ளாக்கப்பட்டுள்ளது எனலாம். இத்தனைக்கும் யாழ்ப்பாணத்தில் இஸ்லாமியருடன் சிங்களவர்களும் சிறுபான்மையாகவே காணப்படுகின்றனர். இதிலும் சிறீலங்காவின் புள்ளிவிபரப்படி யாழ்ப்பாணத்தில் 3366 சிங்களவர்கள் வாழ்வாதாக உள்ளது. ஆனால் அவர்கள் எந்த பிரதேசத்தில் வாழ்கின்றார்கள் என்பது அங்கு வாழும் ஒருவருக்கும் இன்னும் தெரியாது. அவர்கள் எப்போ வந்தார்கள்? அவர்கள் தொழில் என்ன? வதிவிடம் என்ன என்பது புதிர்? நாவற்குழியில் அடாத்தாக வாழும் 45 குடும்பங்கள் தவிர ஏனையோர் எங்கிருக்கின்றார்கள் என்பது தெரியாது. அதிலும் நகைப்புக்குரிய விடயம் என்னவெனில் இஸ்லாமியரைவிட சிங்களவர் அதிகம் என்பதாகும். இது பல கோணங்களில் சிந்திக்கப்படவேண்டிய விடையம் அதாவது தமிழ் பேசும் மக்கள் என்பதற்கு அப்பால் ஒரே சிங்கள பௌத்த நாடு என்னும் வர்க்கத்துக்குள் சிறீலங்கா என்னும் நாமத்துடன் ஆக்கிரமிக்கப்பட்ட வடக்கையும் கிழக்கையும் மாற்றிக் கொள்ளும் படிமுறைகளில் இதுவும் ஒன்றாகும். 

இவற்றுக்கு அப்பால் தற்போது நடைபெற்றுக் கொண்டுள்ள கழிவு எண்ணெய் கலாச்சாரம் எவ்வாறு உருவானது என்னும் விளக்கம் மக்களுக்கு அதிகம் தேவையற்றது. சிறீலங்கா அரச பயங்கரவாதத்துக்கு எதிராக அல்லது சிறுபான்மைகளின் நலன் சார்ந்து கருத்து வெளியிடும் நபர்கள் மீதான அச்சுறுத்தும் அவமானப்படுத்தும் நடவடிக்கையாக கையாளப்பட்டு வந்த இவ் கழிவு எண்ணெய் தற்போது யாழ்பாணத்தில் இஸ்லாம் மத்துக்கு எதிரான அச்சுறுத்தலுக்கான கருவியாக பாவிக்கப்பட ஆரம்பித்துள்ளது வெளிப்படையாக சொல்லப்போனால் இது பொதுமக்கள் ஊடகங்கள் மற்றும் பன்னாட்டு இராச தந்திரிகளுக்கு நன்னு தெரிந்த ஒரு அச்சுறுத்தல் செயற்பாடு என்பதுடன் இதற்கு பின்னால் உள்ள சிறீலங்கா படைப்புலனாய்வு அமைப்புக்களின் நோக்கங்கள் இம்முறை என்னவாக இருக்கலாம் என்னும் ஒரு கேள்வி எழுகின்றது. வழைமயாக தமிழ் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள் மீது இவ் அச்சுறுத்தும் அவமானப்படுத்தும் கைங்கரியத்தைச் செய்த படைப்புலனாய்வாளர்கள் வெளிப்படையாக யாழ்ப்பாணத்தில் இஸ்லாமியருக்கு சொல்ல நினைப்பது அல்லது சர்வதேசமோ தமிழ் சிறுபான்மையோ சிந்திக்க வேண்டியது ஏது என்பது பல கோணங்களில் ஆராயலாம்.

இலங்கையை நெருக்க அல்லது நெருக்கலாம் என எதிர்பார்க்கப்படும் போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பான செய்திகள் பன்னாட்டு ஊடகங்களிலும் இன்னும் சில உள்ணாட்டு ஊடகங்களிலும் தலைப்பிப்பட்டுக் கொண்டு இருக்ககையில் முழு இஸ்லாமிய சமூகமும் அச்சப்படும் படியாக சர்வதேசம் அறிந்து கொள்ளும் படியாக இதை நடாத்தி முடிதிருக்கும் சிறீலங்கா இதன் பின்னால் பாரிய கணிப்பீடு ஒன்றை மேற்கொண்டுள்ளது.

அது சிறீலங்கா சார்பாக பிழைவிடுமா? அல்லது மேலும் சிக்கலில் சிறீலங்கா ஆட்சியாளர்களை கொண்டு செல்லுமா? என்பது காலம் சொல்லும். ஆனால் மேற்குலக இஸ்லாமிய எதிர்ப்பு மற்றும் சமகால இஸ்லாமிய நாடுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியில் சிறீலங்காவில் ஒரு இஸ்லாம் எதிர்ப்பு போக்கை பௌத்த துறவிகளை கொண்டு அரங்கேற்றி இருப்பது சிறீலங்காவின் பொதுமக்களின் கவனத்தை சிறீலங்கா மீதான போர்க்குற்ற விசாரணைகளில் இருந்து தற்காலிகமாக திருப்பிக் கொள்ளும் உள்நோக்கம் கொண்டதாக இருக்கலாம் என்பது ஆய்வாளர்களது சந்தேகம். முற்றும் பொதுவாக தற்போது இலங்கைக்கு பாரிய அச்சுறுத்தலாக இருக்கலாம் என கருதப்படும் இந்திய வெளியுறக் கொள்கை மற்றும் இந்திய புதிய பிரதமர் மோடியின் இலங்கை மீதான கரிசனையில் மாற்றங்களை சிறீலங்கா எதிர்பார்க்கலாம்.
சுpல நாட்டகளுக்கு முன்னர் இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியுள்ள பாகிஸ்தானியர்களைக் கைது செய்ய சிறீலங்கா சுங்கம் மற்றும் புலனாய்வு பிரிவு தொடர்தேடுதல்களை நாடாத்தியதும். அதற்கு முன்னர் பல பாகிஸ்தான் பிரஜைகள் போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்பு படுத்தப்பட்டதும் செய்திகளாக வெளிவந்திருந்தன். இதற்கெல்லதம் மகுடம் சூட்டடுவதுபோல் இலங்கை இஸ்லாமிய பிரசை ஒருவர் பாகிஸ்தான் உளவு அமைப்பாக ஐ.ஏஸ்.ஐ இற்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதும் இது தொடர்பாக இருவரை சிறீலங்கா இராச தந்திரரீதியான எந்த கருத்தும் வெளியிடாமல் அமைதி காப்பதும் உற்று நோக்கவேண்டிய விடயம். உலக புலனாய்வு அமைப்புகளில் மேற்குலம் மற்றும் இந்தியா வெறுக்கும் புலனாய்வு அமைப்பு பாகிஸ்தான் ஐ.ஏஸ்.ஐ ஆகும். இந்தியாவில் நடாத்தப்பட்ட பல பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னால் ஐ.ஐ.எஸ் இருந்தும் பல முறை உறுதிப்படுத்தப்பட்ட போதும் அவர்களின் மீது இந்தியா நேரடியாக இதுவரை தாக்கவில்லை. அதேநேரம் பாகிஸ்தானில் வைத்து ஒசாமா பின்லேடன் தாக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்தபோதும் ஐ.எஸ்.ஐ இன் மீது சந்தேகம் வெளியிட்டிருந்தது.

எனவே தற்போது கருக் கொள்ள ஆரம்பித்துள்ள சிறீலங்கா மீதான போர்க்குற்ற விசாரணைகளின் போக்கில் பெரும் செல்வாக்கு செலுத்தும் நாடுகளான இந்தியா மற்றும் அமெரிக்காவின் மனங்களை தற்காலிகமாகவேனும் வென்று தனது மூன்றாம் முறை ஜனாதிபதிக் கனவை நினைவாக்க மகிந்த தனது சகோதரர்கள் சகிதம் மேற்கொண்ட முயற்சி இதுவாக இருக்கலாம். அதாவது இந்தியாவின் மோடிக்கான பிரதான அடையாளமாக காணப்பட்ட இஸ்லாம் எதிர்ப்பு கொள்கையைத் தனக்குச் சாதகமாக்கி முனைப்புடனும். சர்வதேச அளவில் குறிப்பாக சமகாலத்தில் ஈராக்கில் மற்றும் ஆப்கானிஸ்hதான,; பாகிஸ்தான் எல்லையிலான நெருக்கடிகளில் மேற்கு கவனம் அதிகமாகவும் இஸ்லாம் போராளிகள் மற்றும் தீவிரவாதிகள் என அடையாளப்படுத்தப்பட்டவர்களை ஒழித்துக் கட்ட பெரும் பிரயத்தனப்பட்டுக் கொண்டுள்ள மேற்குலகுக்கும் ஒரு சமிக்ஞையை வழங்கி அதன் உறுத்துணர்வுகளைக் கொண்டு தேர்தல் மற்றும் விசாரணைகளை எதிர் கொள்ள மகிந்த தயாராகின்றார் என்பதேயாகும்.

-வீரபுத்திரர்-
( நன்றி  பதிவு )

No comments:

Post a Comment