பூஸாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது தாயாரை நீண்ட இழுபறிகளின் பின்னர் விபூசிகா பார்வையிட்டுள்ளார். விபூசிகா தனது தாயாரினைப் பார்ப்பதற்கான அனுமதியை கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் கடந்த புதன்கிழமை (30) வழங்கியிருந்தார்.
கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் சந்தேகநபர் ஒருவர் ஒளிந்திருந்ததாகக் கூறி; தாயும் விபூசிகாவும் கிளிநொச்சி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர். தாயாரான பாலேந்திரன் ஜெயக்குமாரிக்கு மூன்று மாதகாலம் தடுப்புக் காவல் விதிக்கப்பட்டு பூஸா தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டார்.
தொடர்ந்து மகள் விபூசிகா மகாதேவா சைவச்சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த புதன்கிழமை விபூசிகாவின் வழக்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தினால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, தாயாரினைப் பார்ப்பதற்கு விடுக்கப்பட்ட கோரிக்கையினை நீதவான் ஏற்றுக்கொண்டு அனுமதியினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment