குருணாகல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோழி பண்ணை ஒன்றில் பணிபுரிந்து வந்த பார்த்திபன் தர்ஷினி (வயது – 30)
என்ற பெண் கத்தி குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். நேற்று இரவு 9 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ தோட்டத்தில் வசிக்கும் மேற்படி பெண் பல வருடங்களாக தனது கணவரோடு பணிபுரிந்து வந்ததாகவும் தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் குருணாகல் பொலிஸார் தெரிவிக்கின்றனர். தற்போது சடலம் குருணாகல் வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இக்கொலை தொடர்பான சந்தேக நபர் ஒருவரை குருணாகல் பொலிஸார் கைது செய்துள்ளனர். மேற்படி பெண்ணின் உறவினர்களை குருணாகல் பொலிஸ் நிலையத்திற்கு வருகை தரவேண்டும்மென பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்திற்கு குருணாகல் பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருணாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment