May 11, 2014

ஊடகங்களை அரசு தண்டிக்கக் கூடாது; இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்து

ஊடகங்கள் மேற்கொள்ளும் பணிக்காக, சிறீலங்கா அரசு அவற்றைத் தண்டிக்கக் கூடாது
என்று தெரிவித்துள்ளார் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பொது விவகாரங்களுக்கான உதவிச்செயலர் டோக் பிரான்ட்ஸ்.  
சர்வதேச ஊடகதினத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் வியாழக்கிழமை அமெரிக்க நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில், காணாலி மூலம் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.    
அதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு: "ஊடகங்கள் செய்கின்ற பணிக்காக ஊடக அமைப்புகளை அமெரிக்கா தண்டிப்பதில்லை. இலங்கை அரசும் அதுபோலவே செயற்பட வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது.    எட்வேட் ஸ்னோடன் வெளியிட்ட உயர் இரகசிய ஆவணங்களை அமெரிக்க ஊடகங்கள் பிரசுரித்த போது. அமெரிக்கா எதையும் செய்யவில்லை. அவர்களின் பணிக்காக ஊடக நிறுவனங்களை நாம் தண்டிக்கவில்லை.  
ஊடக சுதந்திரம் பற்றிய சுட்டியில், 2013இல் 32ஆவது இடத்தில் இருந்த அமெரிக்கா, இந்த ஆண்டில் 46வது இடத்துக்குப் பின் தள்ளப்பட்டுள்ளது. நாம் எப்போதுமே மிகச்சரியாகச் செயற்பட முடிவதில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.    இந்த குறைபாடுகள் இருந்தாலும், ஊடக சுதந்திரத்தின் முக்கியத்துவம் குறித்து ஏனைய நாடுகளுக்கு அமெரிக்கா ஒரு உதாரணமாக இருக்கிறது.'' என்று தெரிவித்துள்ளார்.  

No comments:

Post a Comment