சுவிட்சர்லாந்திலிருந்து 250 அகதிக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக
திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. போலி ஆவணங்களைப் பயன்படுத்தி தமக்கு பாதுகாப்பு தரப்பினரும், படையினரும் அச்சுறுத்தல் விடுப்பதாக சத்தியக்கடதாசி மூலம் முறைப்பாடு செய்துள்ளனர்.
கொழும்பிலிருந்து நேபாளம் ஊடாக சுவிட்சர்லாந்து சென்று தஞ்சமடைந்துள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. நாடு கடத்தப்பட்டவர்களை பாதுகாக்க சில மனித உரிமை அமைப்புக்கள் முயற்சித்துள்ளன. அந்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
நாடு கடத்தப்பட்டவர்களில் சிங்கள மற்றும் தமிழர்கள் உள்ளடங்குகின்றனர்.
அரசாங்கம் மரண அச்சுறுத்தல் விடுப்பதாகத் தெரிவித்து, கடந்த காலங்களில் கருவாட்டு வியாபாரிகள், கழிவறை சுத்திகரிப்பாளர்கள் மற்றும் பாதணி தைப்பவர்கள் உள்ளிட்ட பலரும் சுவிட்சர்லாந்தில் தஞ்சமடைந்துள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது என திவயின பத்திரிகை கடுமையாக சாடியுள்ளது.
நாடு கடத்தப்பட்டவர்கள் எந்தக் காலப்பகுதியில் எந்த அடிப்படையில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள் என்ற விபரங்களை பத்திரிகை வெளியிடவில்லை.
No comments:
Post a Comment