July 18, 2016

ராஜபக்ஷர்கள் விதைத்த விதையின் அறுவடை! காட்டிக் கொடுக்கும் அரச அதிகாரிகள்!

கடந்த மஹிந்த அரசாங்கத்தில் மோசடிகளுக்கு துணை போன அரசாங்க அதிகாரிகள், குற்றவாளிகளை காட்டிக் கொடுக்க தயாராவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


கடந்த ஆட்சியில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பல்வேறு நிதி முறைக்கேடுகளுக்கு ஆதரவு வழங்கியமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள உயர்மட்ட அரசாங்க அதிகாரிகள் பலர், தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படவுள்ளனர்.

குறித்த அதிகாரிகள் தமக்கு எதிராக வழக்குகளில் அரசாங்க சாட்சியாளர்களாக மாறுவதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கமைய சில் அனுஷ்டானங்களுக்கான துணி மோசடி தொடர்பில் அரசாங்க அதிகாரிகள் பலர் தற்போது அரசாங்க சாட்சியாளராக மாறவுள்ளதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அப்போதைய அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களின் அழுத்தங்களுக்கு அமையவே முறைக்கேடுகளில் ஈடுபட்டதாக தற்போது வாக்குமூலம் அளித்துள்ளனர்.

தங்களுக்கு எதிரான விசாரணைகளில் ராஜபக்ச குடும்பத்தினரின் ஆதரவும் கிடைக்காமை, இவ்வாறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளமையினால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள அவமரியாதை, குடும்ப உறுப்பினர்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய ஆகிய சிக்கல் காரணமாக இந்த அதிகாரிகள் அரசாங்கத்தின் சாட்சியாளர்களாக மாறுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment