யாழ். மாவட்டத்தில் கஞ்சா விற்பனையின் மத்திய இடமாக பருத்தித்துறை கற்கோவளம் புனிதநகர் காணப்படுவதாகவும்
இதனைப் பொலிசார் கட்டுப்படுத்தவேண்டும் என பருத்தித்துறை சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் பொதுமக்கள் வேண்டுகோள்விடுத்தனர்.
பருத்தித்துறை பொலிசார் நடாத்திய சிவில் பாதுகாப்புக் கூட்டம் பருத்தித்தறை பொலிஸ் நிலையித்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதன்போதே பொதுமக்களால் மேற்படிவேண்டுகோள் பொலிசாரிடம் முன்வைக்கப்பட்டது.
இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டதாவது புனிதநகர் மீன் சந்தைக்கு அருகாமையில் தினமும் மாலை வேளையில் கஞ்சா விற்பனை இடம்பெறுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இரவு 9மணிக்குப் பின்னர் யாழ்ப்பாணம் பகுதிகளில் ஆட்டோக்களில் வருபவர்கள் கஞ்சா வாங்கிச் செல்வதாகவும் தெரிவிக்கப்ட்டது.
இதேவேளை இந்த நடவடிக்கையைக் கட்டுப்படுத்த காங்கேசன்துறை பிராந்தியப் பொலிஸ் கண்காணிப்பில் ஈடுபடுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

No comments:
Post a Comment