November 30, 2014

மண்ணுக்காய் உயிர்நீத்தவர்களின் ஒழுக்கத்தை நம் சந்ததிக்கு புகட்ட வேண்டும்: மாவை எம்.பி!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் ஏற்பாட்டில் தேசிய வாசிப்பு மாதம் நேற்று சபைத் தலைவர் நாவை.குகராசா தலைமையில் நடைபெற்றது.

இதில் முதன்மை விருந்தினராக தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசா கலந்து கொண்டார்.
சிறப்பு விருந்தினர்களாக வடமகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை, பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பிரபாகரன், கௌரவ விருந்தினர்களாக சர்தய இணைப்பாளர திருமதி மி.டில்லிமலர், மஸ்தான் றேடர்ஸ் உரிமையளர் எஸ்.கே.காதர் ஆகியோர் கலந்து கொண்டார்.
மேலும், கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்கள் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், கரைச்சி பிரதேச சபையின் செயலாளர், ஊழியர்கள் என வாசகர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
இந்த வாசிப்பு மாதத்தில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு விருந்தினர்கள் பரிசில்கள் வழங்கி மதிப்பளித்திருந்தனர்.
அத்துடன் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் நிகழ்வை அலங்கரித்தன.கரைச்சி பிரதேச சபையின் தேசிய வாசிப்பு மாத நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா சிறப்புரையாற்றும்போது,
கிளிநொச்சியில் கரைச்சி பிரதேச சபை இந்த மாவட்டத்திற்கு ஒரு சிறப்பான பொதுநூலகம் ஒன்றை அமைப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதை நான் அறிவேன்.
ஆனால் அதற்குரிய காணியை வழங்குவதற்கு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் மறுத்து பின்னடித்து வருவதையிட்டும் அறிந்துள்ளேன்.
இந்த மாவட்டத்தின் முன்னேற்றம் கருதிய ஒரு நல்ல காரியத்திற்கு அவர் நூலகத்திற்கான காணியை வழங்க முன்வருவதான் பண்புமிக்கதாக அமையும்.
இந்த நாட்கள் நாம் எமக்காக உயிர்நீத்தவர்களை வணங்குகின்ற காலம். எமக்கு உயிர்கொடுத்தல் என்பது எமது வரலாற்றில் சிறந்த பண்புடமையாக கருதப்படுகின்றது.
ஆனால் இங்கு அடக்குமுறை அரசால் எமக்காக உயிர்கொடுத்தவர்களை நினைத்து கண்ணீர் சிந்த முடியாதவர்களாக நாம் நசுக்கப்பட்டிருக்கின்றோம்.
எமது எதிர்கால சந்ததிக்கு ஆசிரியர்கள் சமுக முன்னோடிகள் அர்ப்பணிப்பின் உயர்ந்த பண்பை போதிக்க வேண்டும் என நீண்டதொரு உரையை ஆற்றியிருந்தார்.

No comments:

Post a Comment