புத்தளம் பகுதியைச் சேர்ந்த மூவரை, அதி சக்திவாய்ந்த வெடி
மருந்துகளுடன் யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் வைத்துத் தாம்
கைதுசெய்துள்ளனர்
என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தமக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து நேற்று வியாழக்கிழமை கச்சேரிப் பகுதியில்வைத்து இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர் என்று யாழ். மாவட்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் இன்று தெரிவித்தார்.
ஓட்டோ ஒன்றில் வெடிமருந்துகள், வயர்கள் என்பவற்றை இவர்கள் கடத்திச் சென்றனர் என்றும், இவர்களிடமிருந்து 130 கிராம் நிறையுடைய 286 வெடி மருந்து கம்பிகள் மற்றும் 6 செட் வயர்கள், உள்ளிட்ட பல்வேறு வெடி மருந்து வகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
கைதுசெய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு, அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment