August 13, 2016

காணாமற்போனோர் பணியக சட்டமூலத்தை நிறைவேற்றிய சிறிலங்காவுக்கு அமெரிக்கா பாராட்டு!

காணாமற்போனோர் பணியகத்தை உருவாக்கும் சட்டமூலம் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை அமெரிக்கா வரவேற்றுள்ளது.


இதுகுறித்து தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவிச் செயலர் நிஷா பிஸ்வால், இது சிறிலங்கா நல்லிணக்கத்துக்காக முன்னோக்கி எடுத்து வைத்துள்ள மிகப்பெரிய தடம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள், தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி தனது ருவிட்டர் பக்கத்தில், இட்டுள்ள பதிவு ஒன்றில், காணாமற்போனோர் பணியகத்தை உருவாக்கும் சட்டமூலம்,  சிறிலங்காவுக்கு ஒரு வரலாற்று நகர்வு என்று தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், ருவிட்டரில் இட்டுள்ள பதிவில், சிறிலங்காவில் உள்ள அனைவருக்கும் அர்த்தமுள்ள நல்லிணக்கத்தை நோக்கிய பாதையில் ஒரு வரலாற்று ரீதியான மைல்கல் என்று கூறியிருக்கிறார்.

No comments:

Post a Comment