August 17, 2016

ஜெயகுமாரியிடம் ஆறு மணிநேரம் விசாரணை!

விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள உருவாக்குவதற்கு துணைபோனதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த பாலேந்திரன் ஜெயகுமாரி நேற்று மீண்டும் பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.


 
ஜெயகுமாரிக்கு எதிரான வழக்கு விசாரணை கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றவரும் நிலையிலேயே நேற்று கொழும்பிலுள்ள பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு அலுவலகத்திற்கு ஜெயக்குமாரி அழைக்கப்பட்டு ஆறு மணிநேரம் விசாரணைகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பிலுள்ள பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் அலுவலகத்திற்குள் நேற்று முற்பகல் பத்து மணிக்கு சென்ற ஜெயகுமாரி ஆறு மணித்தியாலங்களுக்கும் அதிகமான நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் ஜெயகுமாரிக்கு எதிரான வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 30ஆம் திகதிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment