August 30, 2016

இலங்கையில் காணாமல் போதல்கள் குறித்து ஐ.நா விசாரணை நடத்த வேண்டும் - வை.கோ!

இலங்கையில் காணாமல் போதல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை விசாரணை நடத்த வேண்டுமென மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வை.கோ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் இது குறித்து விசாரணை நடத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.


தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளுக்கு விஷமூட்டப்பட்ட விடயம் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
பாலகுமார் என்ற தலைவர் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது காணாமல் போயுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

யோகி, பேபி சுப்ரமணியம் மற்றும் எழிலன் போன்றவர்களை இலங்கை இராணுவம் கைது செய்த போதிலும் அவர்களையும் காணவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் நிறைவடைந்து ஏழு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் இன்னமும் இவர்கள் பற்றிய எவ்வித தகவல்களும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment