August 17, 2016

சீகிரியாவை குறி வைக்கும் வெளிநாட்டவர்கள்!

இலங்கையிலுள்ள சீகிரியா குன்று போன்ற உலக பாரம்பரிய சொத்துக்களை பார்வையிடுவதில் அதிகளவான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.


சீகிரியா குன்றை நோக்கி படையெடுக்கும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள கற்களின் மீது பயணிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவதாக மத்திய கலாசார நிதியத்தின் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நாட்களில் கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 5000 பேர் சீகிரியாவுக்கு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் புராதன சொத்துக்களை பாதுகாப்பது முக்கியம் என்பது குறித்து சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ள போதிலும் சுற்றுலா பயணிகள் அதனை கருத்திற் கொள்வதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

சீகிரியா அலுவலகத்தில் 350 ஊழியர்கள் செயற்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை சீரியாவுக்கு செல்லும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் 4260 ரூபா அறவிடப்படுவதாகவும், உள்ளூர் பயணிகளிடம் 60 ரூபா அறிவிடப்படுகின்றது.

No comments:

Post a Comment