July 8, 2016

மைத்திரியை, மஹிந்த விழுந்து வணங்க வேண்டும்! இராஜாங்க அமைச்சரின் அதிரடி கருத்து!

மின்சார நாற்காலி தண்டனையிலிருந்து காப்பாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விழுந்து வணங்க வேண்டுமென அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.


அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில், சர்வதேச போர்குற்ற நீதிமன்றம் மற்றும் மின்சார நாற்காலி தண்டனையிலிருந்து மஹிந்த ராஜபக்சவை, ஜனாதிபதி மைத்திரிபால காப்பாற்றியுள்ளார்.

எனவே ஜனாதிபதியை வெள்ளை கைக்குட்டை ஒன்றை கீழே இட்டு ஜனாதிபதியை மஹிந்த வணங்க வேண்டும்.

மஹிந்த ராஜபக்ச விஹாரைகளுக்கு சென்று அரசாங்கத்தையும், ஜனாதிபதியையும் திட்டுவதனை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

குருணாகால் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் குற்றச்சாட்டுக்களை நாடாளுமன்றில் அவர் வெளிப்படுத்த வேண்டும்.

எனினும் நாடாளுமன்றிற்கு செல்லாமல் ஆட்சியில் இருந்த காலத்தில் செயற்பட்ட எதனோல்காரர்கள், கப்பம் காரர்கள், மற்றும் குற்றவாளிகளைக் கொண்ட கும்பல் ஒன்றை உருவாக்கி ஜனாதிபதியை விமர்சனம் செய்து வருகின்றார்.

பண்டிக்கு அழுக்கு இன்றி வாழ முடியாது. அதேபோன்று இவர்களுக்கும் அழுக்கு இன்றி வாழ முடியாத நிலைமை காணப்படுகின்றது.

மஹிந்த ராஜபக்ச மக்கள் மீது கரிசனை கொண்ட தலைவராக நான் பார்க்கவில்லை. வற் வரி தொடர்பில் போராட்டம் நடத்தப்படுகின்றது.

அதிகளவில் சில்லறை வர்த்தகர்களே இந்தப் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். எனினும் இவர்களில் பலர் வற் வரி செலுத்துவதற்காக பதிவு செய்து கொண்டவர்கள் அல்ல என பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment