இந்திய இழுவைப்படகுகளை இலங்கை கடற்பரப்பில் தொழில்செய்ய அனுமதிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டம் ஒன்று எதிர்வரும் 12ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.
தொழில்களை இடைநிறுத்தும் போராட்டம் ஒன்றை தாம்நடத்தவுள்ளதாக வடமாகாண கடற்றொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் வவுனியாவில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றின்போது முடிவெடுக்கப்பட்டதாக மன்னார் கடற்றொழிலாளர் சங்கத்தலைவர் மற்றும் வடமாகாண கடற்றொழிலாளர் சம்மேளன இணையத்தின் தலைவரான மொஹமட் ஆலம் தெரிவித்துள்ளார்.
இது வடமாகாணத்துக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட பிரச்சினையல்ல. இது தேசிய பிரச்சினையாகும் என்ற அடிப்படையிலேயே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment