July 29, 2016

வவுனியாவில்புனர்வாழ்வை பூர்த்தி செய்த முன்னாள் போராளிகளுக்கு வைத்திய சிகிச்சை முகாம்

வவுனியா கலாச்சார மண்டபத்தில் நேற்று காலை முதல் மாலைவரை புனர்வாழ்வு ஆணையாளர் நாயகப் பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்ட வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ் நிலையத்தில் ஒரவருட புனர்வாழ்வை பூர்த்தி செய்துகொண்டு வெளியேறியுள்ள முன்னாள் போராளிகள், குடும்பத்தினர்கள், பிள்ளைகள் போன்றவர்களுக்கு வைத்திய சிகிச்சை முகாம் ஊடாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.


இவ் வைத்திய சிகிச்சை முகாமில் இரத்தப் பரிசோதனை, கண் பரிசோதனை, உளவியல் போன்ற வைத்திய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ் வைத்திய சிகிச்சை முகாமில் மட்டக்கள்ப்பு, திருகோணமலை, கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு. வவுனியா போன்ற பிரதேசங்களிலிருந்து முன்னாள் போராளிகள் உறவினர்கள், பிள்ளைகள் சமூகமளித்திருந்தனர்.

இவ் வைத்திய சிகிச்சை முகாமில் வைத்தியர் லலித் மென்டிஸ், வைத்தியர் தர்ஷினி, வவுனியா பொது வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள், குடும்பநல உத்தியோகத்தர்கள், புனர்வாழ்வு அணையாளர் பணியக பிரதி ஆணையாளர், பூந்தோட்ட புனர்வாழ் நிலைய பொறுப்பதிகாரி, பின் இணைப்பு அதிகாரி, இராணுவ அதிகாரிகள், விமானப்படை, பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



No comments:

Post a Comment