ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அலுவலகம் வடக்கு கிழக்கில் அமைக்கப்பட வேண்டுமென வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வாழ் தமிழ் மக்கள் கடந்த 70 ஆண்டுகளாக நெருக்கடிகளை அனுபவித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பும் சர்வதேச சமூகமும் சிறந்த தீர்வு ஒன்றை வழங்கும் என தமிழ் மக்கள் காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஆட்சி செய்த அரசாங்கங்கள் தொடர்ச்சியாக தமிழ் மக்களை ஏமாற்றி வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பினால் பல தடவைகள் அறிக்கைகள், தீர்மானங்கள், விசாரணைகள் நடத்தப்பட்ட நிலையில் கடந்த ஆண்டிலேயே தீர்மானமொன்றுக்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இனச் சுத்திகரிப்பு உள்ளிட்ட தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அனைத்து அநீதிகளுக்கும் நியாயம் வழங்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். வெளிநாட்டு நீதவான்கள் வழக்குரைஞர்களின் பங்களிப்பு இன்றி தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்க வாய்ப்பு கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment