July 29, 2016

மகிந்த அணியின் பாதயாத்திரை – இன்று இரண்டாவது நாள்!

பேராதனை பாலத்தில் இருந்து நேற்று ஆரம்பிக்கப்பட்ட, மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியின் அரச எதிர்ப்புப் பாதயாத்திரை இன்று இரண்டாவது நாளாக கொழும்பு நோக்கி இடம்பெறவுள்ளது.


கண்டி நகருக்குள் பேரணி நடத்தக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவினால், பேராதனைப் பாலத்தில் நேற்றுக்காலை 9 மணியளவில் இந்தப் பாதயாத்திரை ஆரம்பிக்கப்பட்டது.

ஆலய வழிபாடுகளை அடுத்து தொடங்கப்பட்ட இந்தப் பாத யாத்திரையில் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்தப் பாதயாத்திரையினால், கொழும்பு- கண்டி வீதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நேற்றுமாலை கடுகண்ணாவவில் இந்தப் பாதயாத்திரை நிறுத்தப்பட்டது. இன்று காலை மீண்டும் அங்கிருந்து பாதயாத்திரை ஆரம்பமாகவுள்ளது.

வரும் ஓகஸ்ட் 1ஆம் நாள், கொழும்பை வந்தடையும் வகையில் இந்தப் பாதயாத்திரைக்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment