இலங்கையில் மீறல்களுக்குப் பொறுப்புகூறும் விசாரணைப் பொறிமுறையில் சர்வதேச பங்களிப்பு அவசியம் என்றும் சர்வதேச சமூகத்திற்கு பொறிமுறையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டுமாயின்
சர்வதேச பங்களிப்பு இருக்க வேண்டும் என்றும் பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலங்களுக்கான துணை அமைச்சர் ஹுயூகோ சுவயர் தெரிவித்துள்ளார்.
யுத்த குற்றவிசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பை ஜனாதிபதி மற்றும் பிரதமர் நிராகரித்தமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதில் அளித்த போதே துணை அமைச்சர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
சர்வதேச நீதிபதிகள் உள்ளடக்கப்பட வேண்டும் என்ற விடயத்தில் பிரதமர் ரணில் விக்ரமங்சிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செய்த் ராத் அல் ஹுசைன் ஊடாக அரசாங்கத்திற்கு பிரித்தானிய அரசாங்கம் தொடர்ந்தும் அழுத்தம் கொடுப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தக் குற்ற விசாரணைகளில் சர்வதேச பங்களிப்பு குறித்து மேலும் கருத்து வெளியிட்ட ஹியூகோ சுவயர், எந்தவொரு பொறுப்பு கூறல் பொறிமுறையும் நம்பகத்தன்மை வாய்ந்ததாகவும் சர்வதேச தரத்தை பூர்த்தி செய்யும் வகையிலும் அமைய வேண்டும் என்பதில் பிரித்தானிய அரசாங்கம் தெளிவாக உள்ளதாக கூறியுள்ளார்.
இதன்பிரகாரம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் ஸ்ரீலங்காவின் இணை அனுசரணையுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை வரவேற்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த தீர்மானத்தில் வழங்கிய உறுதிமொழிகளை முழுமையாக நிறைவேற்றுமாறு ஜெனிவாவில் அண்மையில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வு உள்ளிட்ட பல்வேறு சந்தர்ப்பங்களில் வலியுறுத்தியதாக பிரித்தானிய துணை அமைச்சர் ஹியூகோ சுவயர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment