வலிகாமம் வடக்கில் 273 குடும்பங்களுக்கு தலா இரண்டு பரப்பு வீதம் இன்று அரசகாணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பலாலி வடக்கு ஜே.254 கிராம சேவகர் பிரிவிலுள்ள அன்ரனிபுரம் பகுதியில் அரசாங்கத்திற்கு சொந்தமான காணிகள் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதனால் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
பலாலி வடக்கு அன்ரனிபுரத்தைச் சேர்ந்த 144 குடும்பங்களுக்கும், பலாலி வடக்கில் மீள்குடியமர்வுக்குப் பதிவுசெய்த காணியற்ற 129 குடும்பங்களுக்கும் தலா 2 பரப்புக்காணி வீதம் அமைச்சர் டி.எம். சுவாமிநாதனால் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பலாலி வடக்கு ஜே. 254 பகுதியிலுள்ள அன்ரனிபுரம், கடந்த டிசம்பர் 29 ஆம் திகதி இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டு, தெல்லிப்பளை பிரதேச செயலரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்ட காணிகளில் வீடு கட்டுவதற்கான அடிக்கற்களை மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் இன்று நாட்டி வைத்துள்ளார். தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட குடும்பங்களுக்கான 890 புதிய வீடுகளுக்கும், 90 திருத்த வீடுகளுக்குமான அடிக்கற்களை மீள்குடியேற்ற அமைச்சர் நாட்டி வைத்துள்ளார்.

No comments:
Post a Comment