யுத்தகாலத்தில் குறிவைத்து மரத்தில் தொங்கவிடப்பட்டிருந்த கிளைமோர் வெடிகுண்டு வெடித்ததில் முகத்தில் பலத்த காயங்களுக்குள்ளான
குடும்பப் பெண் ஒருவர் வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக மல்லாவி பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை காலை மூன்று முறிப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் சுபாஸ்கரன் பைரவி வயது(27) என்ற குடும்பப் பெண்னே முகத்தில் காயங்களுக்குள்ளானவர்.
விறகு வெட்டச் சென்ற நபர்கள் காட்டில் உள்ள காய்ந்த மரங்களுக்கு தீ வைத்தபோது மரத்தில் தொங்கிகொண்டிருந்த கிளைமோர் குண்டு தீயின் வெக்கையால் பலத்த சத்தத்துடன் வெடித்தது.
மகனை பாடசாலையில் விட்டுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த போது மேற்படி பெண் மீது வெடித்துச் சிதறிய கிளைமோர் துண்டுகள் பட்டுள்ளன.
வீதியால் சென்றவர்களினால் காப்பாற்றப்பட்ட பெண் உடனடியாக மல்லாவி பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

No comments:
Post a Comment