June 28, 2016

ஐ.நா தீர்மானங்கள் புறக்கணிக்கப்பட்டால், தொடர்போராட்டம் வெடிக்கும். மாவை எச்சரிக்கை!

இலங்கை அரசாங்கம், ஐ.நா தீர்மானங்களை நிறைவேற்றாது புறக்கணிக்குமாயின் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என  தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா எச்சரித்துள்ளார்.


வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து வாழும் மக்கள் தம்மை மீள் குடியேற்ற கோரி திங்கட்கிழமை காலை நல்லூர் முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்து இருந்தனர்.

போராட்டத்தின் பின்னர் மாவை சேனாதிராஜா ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

புதிய அரசாங்கத்தை நம்பிக்கையுடன் வாக்களித்து ஆட்சிக்கு கொண்டுவந்த மக்கள் ஜனாதிபதியும், பிரதமரும் அந்த மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றததால் அவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளார்கள்

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஐ.நா தூதராலயத்தில் மகஜர் கையளிக்கின்றார்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் இந்த மக்களின் போராட்டத்திற்கு எமது முழுமையான ஆதரவை வழங்குகின்றோம்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அல் உசைன்  மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கும் அறிக்கையின் பின்னரும் இந்த அரசாங்கம் ஐ.நா தீர்மானங்களை நிறைவேற்ற தவறுமாயின் தொடர்போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என தீர்மானிக்க வேண்டிய நிலை ஏற்படும். என மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment