June 2, 2016

போர்க் குற்ற விசாரணை ;சர்வதேச விசாரணைகளற்ற உள்நாட்டு நீதிபதிகள் உள்ளக விசாரணை!

சர்வதேசத்தினதும் உள்நாட்டு சிவில் அமைப்புக்களினதும் கோரிக்கைகளை நிராகரித்துள்ள இலங்கை அரசாங்கம்,
போர்க் குற்றம் தொடர்பான உள்ளக விசாரணைகளை உள்நாட்டு நீதிபதிகளைக் கொண்டு நடத்தவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுதொடர்பான அறிவிப்பை அரச உயர்மட்டம் இராணுவ உயர்மட்டத்திற்கு விடுத்திருப்பதாக சிங்களப் பத்திரிகை ஒன்று இன்று வியாழக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

மேஜர் ஜெனரல் மட்டத்திலிருந்து கர்னல் அதிகாரிகள் வரை இந்த அறிவுறுத்தலை அரசாங்கம் வழங்கியிருப்பதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

எதிர்வரும் 13ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வு ஜெனீவாவில் நடைபெறவுள்ளது.

இதில் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசைன் இலங்கை தொடர்பான முக்கிய அறிவிப்பை விடுக்கவிருப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மற்றும் வடக்குஇ கிழக்கிலுள்ள சிவில் அமைப்புக்களும்இ பாதிக்கப்பட்டவர்கள் தரப்பும் இந்த விசாரணைகளுக்கு சர்வதேச நீதிபதிகள் தேவை எனக் கூறி வருகின்றனர்.

இந்த உள்நாட்டு விசாரணைகளின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவுத் தலைவியாக செயற்பட்ட காலஞ்சென்ற தமிழினி முன்வைத்த கருத்துக்களும் முன்வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் சர்வதேச விசாரணைகளற்ற உள்நாட்டு நீதிபதிகளின் பங்களிப்புடன் உள்ளக விசாரணை ஒன்றே நடத்தப்படும் என்ற விடயத்தை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் அழுத்தமாக கூறிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment