June 27, 2016

பரவிப்பாஞ்சான்னில் உள்ள தமது காணிகளை பார்க்க உரிமையாளர்களிற்கு இராணுவம் அனுமதி மறுப்பு!

இன்றைய  தினம்  பன்னிரண்டு  மணியளவில்  பரவிப் பாஞ்சான்  னில்   உள்ள  தமது  காணிகளை  விடுவிக்க  கோரி  குறித்த  காணியில்  உள்ள  இராணுவத்தினரிடம்   அவ்  காணி  உரிமையாளர்கள்  கடிதம்  ஒன்றினையும்  சமர்ப்பித்து  தமது  காணிகளை  பார்வையிட  அனுமதி  கோரியிருந்தனர்.

இருப்பினும்  கடித்தத்தை  தமது  உயர்  அதிகாரிகளுக்கு  அனுப்பி  வைப்பதாக  பெற்றுக்  கொண்ட  குறித்த  இராணுவ  முகாம்  மேஜர்   அவர்களது  காணியினை  சென்று  பார்வையிட  முடியாது  எனவும்  அனுமதி  கொடுப்பதற்கு  தமக்கு  அதிகாரம்  இல்லை  எனவும்  கூறி  அனுமதி  மறுக்கப்பட்டு  உள்ளது.

காணி  உரிமையாளர்கள்   2015.10 .05   அன்று  பரவிப்பாஞ்சான்னில்  ஒருபகுதி  காணி  விடுவிக்க  பட்டுள்ளதாகவும்   இன்னமும்  54   குடும்பங்களின்  காணிகள்  விடுவிக்க  படாமல்  உள்ளதாகவும்  அதில்  இப்பொழுது  20  குடும்பங்கள்  கிளிநொச்சியில்  தாம்  வாழ்வதற்கு  காணிகள்  இல்லாமல்  வாடகைக்கும் , உறவினர்களது  வீடுகளில்    இருப்பதாகவும்  குறைந்தது  அந்த  20  குடும்பங்களின்   காணிகளையாவது  முதலில்   விடுவித்து  தருமாறும்  இதற்கான  பதிலை  ஒரு  வாரத்துக்குள்  அறியத்தருமாறும்  குறித்த  கடித்தத்தில்  கோரி  உள்ளதாக  தெரிவிக்கின்றனர்.

குறித்த  கடித்தத்தினை  பார்வையிட்ட  குறித்த  இராணுவ  முகாம்  மேஜர்  இக்  கடித்தத்தினை  தமது   உயர்  அதிகாரிகளுக்கு  அனுப்பி  ஒருவாரத்திற்குள்  அவர்கள்  தகவல்  தந்தால்  உங்களுக்கு  அறியத்தருவேன்  என  கூறினார்.

அத்தோடு   தாம்  இவ்  இடத்தில்  தற்காலிகமாக  இருப்பதாகவும்  தமக்கும்   உங்களுக்கும்  எவ்வித  பிரச்சனைகளும்  இல்லை  எனவும்  தமது  உயர்  அதிகாரிகள்  இன்று  இக்காணியில்  இருந்து  வெளியேறுங்கள்  என  கூறினால்  இன்றே   இக்காணிகளை  நாம்  உங்களிடம்  கையளிப்போம்  என  தெரிவித்தார்.

இதற்க்கு  காணி  உரிமையாளர்கள்  எவாராயினும்  இதற்கான  நல்ல  பதிலை  ஒருவாரத்திற்குள்  பெற்றுத்தாருங்கள்    பெற்றுத்  தருவீர்கள்  என்ற  நம்பிக்கையில்  செல்வதாகவும்  அவ்வாறு  இல்லை  என்றால்  அடுத்ததாக  நாம்  அனைவரும்  நீங்கள்  காணியினை  விடுவிக்கும்  வரைக்கும்  இவ்  முகாம்  முன்றலிலே  இருப்போம்  எனவும்  தெரிவித்தனர்.





No comments:

Post a Comment