June 3, 2016

கிளிநொச்சியில் நடமாடும் கசிப்பு வியாபாரிகள்: மக்கள் கவலை!

கிளிநொச்சி நகரிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் நடமாடும் கசிப்பு வியாபாரிகள் அதிகரித்துள்ளதாக
பரவலாக பொது மக்களால் கவலை  தெரிவித்துவந்த நிலையில்  அது உண்மை என்பது எமது ஊடகவியலாளரின் கமராவில் பதிவான காட்சிகள் உறுதிப்படுத்தியுள்ளது.


02-06-2016 வியாழக்கிழமை மாலை ஆறு முப்பது மணியளவில் கிளிநொச்சி பொதுசந்தைக்கு அருகில் உள்ள வீதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் துவிச்கக்கர வண்டியில் சிறிய காட்போட் பெட்டி ஒன்றை கட்டியவாறு அங்கும் இங்கும் பயணித்த ஒருவரின் மீது சந்தேகம் ஏற்பட அவரை  தொடர்ந்தும் ஊடகவியலாளர் அவதானிக்க தொடங்கியுள்ளார்.


இதன் போது  குறித்த வீதியால் நடந்து வந்த இருவர் குறித்த நபரிடம் பணத்தை கொடுத்து இரண்டு சிறிய சொப்பின் பை பொதியை பெற்று அந்த இடத்திலேயே குடிப்பதனை ஊடகவியலாளர் அவதானித்துள்ளார்.

இதனையடுத்து அவர்களின் அருகில் விரைந்து சென்று காட்போட் பெட்டியை பார்வையிட்ட போது அதில் சைவ உணவகங்களில் ரசம் சொப்பின் பையில் பொதி செய்துவைத்திருப்பது போன்று கசிப்பு பொதிகள் பல காணப்பட்டுள்ளன.


இதனை தொடர்ந்து அதனை புகைப்படம் எடுக்க முற்பட்ட போது சுதாகரித்துக்கொண்ட குறித்த நபர் துவிச்சக்கர வண்டியில் வேகமாக சென்றுவிட்டார். இதேவேளை ஒரு பொதிக்கு  ஜம்பது ரூபா கொடுத்து இரண்டு பொதிகளை வாங்கி குடித்த நபர்களும் வீதியால் நடந்து சென்று விட்டனர்.


அன்மைக்காலமாக கிளிநொச்சியில்  கஞ்சா, கசிப்பு உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகள் சந்தேகத்திற்கு இடமின்றி சமூகவிரோதிகளால் தாரளமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை சுட்டிகாட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment