ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் சுயாதீனமானால் எமக்கு அதில் நன்மை ஏற்படும் என வயம்ப பல்கலைக்கழகத்தின் வணிகக் கல்வி மற்றும் நிதி பீடத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி அமிந்த மெத்சில தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் அண்மையில் நடைபெற்ற சர்வஜன வாக்கெடுப்பு குறித்து அவர் இந்த கருத்தை கொழும்பு பத்திரிகையொன்றிடம் வெளியிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்…
பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமையை இழந்தால் சுயாதீனமாகும் அந்த நாட்டுடன் இரு தரப்பு உடன்படிக்கைகளை கைச்சாத்திட முடியும்.
ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையே எமக்கு மிகவும் முக்கியமானது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகக் கூடாது என்ற அந்நாட்டு பிரதமர் டேவிட் கமருனின் பிரச்சாரத்திற்கு இலங்கை நேரடியாகவே ஆதரவளித்தது.
பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகித்தால் மட்டுமே இலங்கை ஏற்றுமதி செய்யும் 7200 பண்டங்களுக்கு வரிச் சலுகை கிடைக்கும், இதன் காரணமாக இவ்வாறு பகிரங்கமாக ஆதரவளிக்கப்பட்டது.
எமது நாட்டின் 40 வீதமான ஆடை உற்பத்திகள் பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இரு தரப்பு உடன்படிக்கையின் மூலம் சந்தர்ப்பத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என கலாநிதி அமிந்த மெத்சிறி தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment