தமிழக மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை திசை திருப்பும் வகையில் கச்சத்தீவு பிரச்சினையை தமிழக முதல்வர் கையிலெடுத்துள்ளார் என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சுமத்தியுள்ளார்.
எப்போதும் இந்தப் பிரச்சினை தொடர்பாக ஜெயலலிதா கேள்வி எழுப்பும் போது அதற்கு உரிய பதில்களை தாம் வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் ஜெயலலிதா, ஏனைய பிரச்சினைகளை மறைப்பதற்காக கச்சத்தீவு பிரச்சினையை முன்னிலைப்படுத்துவதாக கருணாநிதி குற்றம் சுமத்தியுள்ளார்.
ஏற்கனவே நீதிமன்றத்தில் இந்தப்பிரச்சினை கொண்டு வரப்பட்டபோது கச்சத்தீவு விடயத்தில் இந்திய மத்திய அரசாங்கம், தமிழக அரசாங்கத்தை கலந்தாலோசிக்காமலேயே கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தமை குறித்து கூறப்பட்டுள்ளது.
எனினும் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டமைக்கு தானே காரணம் என்று ஜெயலலிதா குற்றம் சுமத்தி வருகிறார் என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment