ஆஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக கடல் வழியாக தப்பிக்க முயன்ற இலங்கை அகதிகளை திருவள்ளூர் அருகே கடலோர காவல்படையினர் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை தமிழர்கள் சிலர் ஏஜென்ட்கள் மூலமாக கடல் வழியாக ஆஸ்திரேலியாவிற்கு தப்பிச் செல்வதாக கடலோர காவல்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளதையடுத்தே மேற்படி பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளனர்.
இதன்போது, திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே பொலிஸார் தீவிர வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மூன்று வேனில் வந்த இலங்கை அகதிகளிடம் பொலிஸார் விசாரணை நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கோயிலுக்கு செல்வதாக முதலில் பதில் அளித்த அவர்கள், முன்னுக்கு பின்னாக பதிலளித்தனர்.
பொலிஸார் கைது செய்ய முயன்ற போது, அவர்களை திசைத்திருப்பி விட்டு வேனில் வந்த சில இலங்கை அகதிகள் அங்கிருந்து தப்பியோடியதாகவும் தெரிவிக்கப்படகின்றது.
மேலும், 30 பேர் தப்பியோடி விட்ட நிலையில், எஞ்சிய 6 பெண்கள், 6 குழந்தைகள் உள்ளிட்ட 18 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று சோழவரம் சோதனைச்சாவடி, பெரிய பாளையம் சோதனைச்சாவடி ஆகிய பகுதிகளில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வாகனத்தில் வந்த 20 இலங்கை தமிழர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தி வரும் க்யூ பிரிவு பொலிஸார், தப்பியோடிவர்களையும் தீவிரமாக தேடி வருவதாகவும் அச்செய்தியில் மெலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment