இலங்கையின் 9 வீர, வீராங்கனைகள் இதுவரை ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் விழாவில் பங்குபற்றும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
மரதனோட்ட வீரரான அனுராத இந்த்ரஜித் குரே, ஈட்டி எறிதல் வீரரான சுமேத
ரணசிங்க, மரதன் வீராங்கனையான நிலுகா ராஜசேகர ஆகியோர் ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் விழாவில் போட்டியிடுவதற்கான அடைவு மட்டத்தை எட்டியுள்ளனர்.
அதனைத் தவிர, ஒலிம்பிக் விழாவில் பங்குபற்ற வழங்கப்படும் மேலதிக வாய்ப்பின் பிரகாரம் தெரிவுசெய்யப்பட்ட 6 வீர, வீராங்கனைகள் அதனைப்பெற்றுக்கொள்ளவுள்ளனர்.
அதற்கமைய, பட்மிண்டன் வீரரான நிலுக்க கருணாரத்ன, குறிபார்த்து சுடும் வீரரான மங்கள சமரக்கோன், ஜூடோ வீரரான சாமர நுவன் தரம்ரத்ன ஆகியோரும் ஒலிம்பிக் விழாவில் பங்குபற்றவுள்ளனர்.
அவர்களைத் தவிர, பளுதூக்கல் விளையாட்டில் ஒரு வீரருக்கும், நீச்சல் விளையாட்டில் தலா ஒரு வீர, வீராங்கனைக்கும் வாய்ப்புள்ள போதிலும் அதற்கான போட்டியாளர்களின் பெயர்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் விழா எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் பிரேஸிலில் நடைபெறவுள்ளது.

No comments:
Post a Comment