மகிந்த ராஜபக்சவின் முன்னாள் ஆலோசகரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சஜின் வாஸ் குணவர்த்தன இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வர்த்தகர் ஒருவரிடம், 3 மில்லியன் ரூபா கப்பம் பெற்ற குற்றச்சாட்டின் பேரிலேயே, சஜின் வாஸ் குணவர்த்தனவை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர்.
இதையடுத்து, கொழும்பு பிரதம நீதிவான் முன்னிலையில் நிறுத்தப்பட்ட போது, அவரை எதிர்வரும் ஜூலை 5ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.
சிறிலங்கா அதிபர் செயலக வாகனங்களைத் தவறாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில், கடந்த ஆண்டு மே மாதம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட சஜின் வாஸ் குணவர்த்தன, கடந்த செப்ரெம்பர் மாதமே பிணையில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment