May 24, 2016

'இன்று நேற்று நாளை' ரவிக்குமாருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்?

ன்று நேற்று நாளை' புகழ் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 'ரஜினிமுருகன்'
ஹிட்டுக்குப் பின் 'ரெமோ' படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். அறிமுக இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இதைத் தொடர்ந்து மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் பொன்ராம், ரவிக்குமார் இயக்கத்தில் அடுத்தடுத்து இவர் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த 2 படங்களையும் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனமே தயாரிக்கப் போவதாக கூறப்படுகிறது. 'இன்று நேற்று நாளை' படத்தின் முதல் பாகத்தில் ஆர்யா ஒரு காட்சியில் நடித்திருந்தார். இதனால் அப்படத்தின் 2 வது பாகத்தில் ஆர்யா நாயகனாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.தற்போது சிவகார்த்திகேயனை ரவிக்குமார் இயக்கப் போவதாக கூறுகின்றனர். மற்றொருபுறம் பொன்ராம்-சிவகார்த்திகேயன் கூட்டணியில் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினிமுருகன்' படங்கள் வெளியாகி வெற்றி பெற்றுள்ளன. இதனால் 3 வது முறையாக இவர்கள் இணையும் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


No comments:

Post a Comment