நாடு தேசிய அனர்த்த நிலைமையை எதிர்நோக்கியுள்ள சந்தர்ப்பத்தில் அரசாங்கம்
இந்தியாவுடன் எட்கா உடன்படிக்கையை கைச்சாத்திட முயற்சிப்பதாக தேசிய பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டின் அனைத்து மக்களினதும் கவனமும் தேசிய அனர்த்தம் தொடர்பிலேயே காணப்படுகின்றது என சங்கத்தின் செயலாளர் டொக்டர் சன்ன ஜயசுமன கொழும்பு ஊடகங்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
இவ்வாறான ஓர் நிலையில் அரசாங்கம் இந்தியாவுடன் உத்தேச பொருளாதார தொழில்நுட்ப கூட்டுறவு (எட்கா) தொடர்பில் இரகசியமாக கைச்சாத்திட முயற்சிக்கின்றது.
பொருளாதார தொழில்நுட்ப கூட்டுறவு ஒப்பந்தம் தொடர்பிலான இணக்கப்பாடு ஒன்றில் கைச்சாத்திடுவதாகக் கூறி முழு ஒப்பந்தத்திலும் இரகசியமாக கைச்சாத்திடப்பட உள்ளது.
இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட வேண்டாம் என நாட்டின் புத்திஜீவிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் சில மாதங்களாக அரசாங்கத்தை கோரி வருகின்றனர்.
இந்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டு புத்திஜீவிகள் கடந்த மார்ச் மாதம் 7ம் திகதி போராட்டம் ஒன்றையும் நடத்தியிருந்தனர்.
எனினும் இந்த எதிர்ப்புக்களை கருத்திற் கொள்ளாது இரகசியமான முறையில் அரசாங்கம் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட உள்ளதாக சங்கத்தின் செயலாளர் டொக்டர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 94 பல்கலைக்கழக பேராசிரியர்களின் கையொப்பத்துடன் கூடிய கடிதமொன்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment