விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த 18ம் திகதி
இராணுவத் தலைமையகத்துக்குச் சென்றிருந்த முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அங்கு தனது உருவப்படத்தை திறந்து வைத்தார்.
இராணுவத் தலைமையகத்தில் முன்னாள் இராணுவத் தளபதிகளின் படங்கள் கால வரிசைப்படி இருப்பது வழமை. ஒரு இராணுவத் தளபதி ஓய்வு பெற்றுச் செல்லும் போது தனது படத்தை திறந்து வைத்து விட்டுச் செல்வது மரபு.
2005ம் ஆண்டு தொடக்கம் 2009ம் ஆண்டு வரை இராணுவத் தளபதியாகப் பதவி வகித்த சரத் பொன்சேகாவும் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற போது தனது படத்தை திறந்து வைத்திருந்தார்.
ஆனால் 2010 ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை எதிர்த்து போட்டியிட்ட சரத் பொன்சேகா அதில் தோல்வியைச் சந்தித்த பின்னர் இராணுவத் தலைமையகத்தில் இருந்த அவரது படம் நீக்கப்பட்டது.
இலங்கை இராணுவத்துக்கு கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் தலைமை தாங்கியவர் என்பதற்கான அடையாளங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன. மகிந்த ராஜபக்சவினால் புதிதாக எழுதப்பட்ட மகாவம்சத்திலும் கூட சரத் பொன்சேகாவின் பெயர் மறைக்கப்பட்டது.
இராணுவ நீதிமன்றில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு சரத் பொன்சேகாவின் இராணுவப் பதவி நிலைகள் அனைத்தும் பறிக்கப்பட்டதுடன் சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தார்.
இரண்டு ஆண்டுகளின் பின்னர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தாலும் சரத் பொன்சேகாவிடம் இருந்து பறிக்கப்பட்ட இராணுவப் பதவி நிலைகள் ஏதும் மீள வழங்கப்படவில்லை.
கடந்த ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து உடனடியாகவே சரத் பொன்சேகாவுக்கு இழந்து போன இராணுவ கௌரவங்கள், பதவிகள் திருப்பி அளிக்கப்பட்டன.
அதன் பின்னர் பீல்ட் மார்ஷலாகவும் பதவி உயர்த்தப்பட்டார். தன்னால் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட ஏழாவது ஆண்டு நிறைவில் பீல்ட் மார்ஷலாக பதவியேற்ற பின்னர் முதல்முறையாக இராணுவத் தலைமையகத்துக்குச் சென்ற சரத் பொன்சேகா அங்கு தனது படத்தை மீண்டும் திறந்து வைத்திருக்கிறார்.
இம்முறை அவரது படம் இராணுவத் தளபதிகளின் வரிசையில் அன்றி தனியாக ஒரு பீல்ட் மார்ஷல் என்ற கௌரவத்துடன் மாட்டப்பட்டிருக்கிறது.
ஏழு ஆண்டுகள் கழித்தும் போரை முடிவுக்கு கொண்டு வந்ததற்காக சிங்கள அரசியல் தலைமைகள் மத்தியில் நடந்து வரும் கயிறிழுப்பின் ஒரு கட்டம்தான் இதுவும்.
ஒரு பக்கத்தில் போருக்குத் தலைமை தாங்கியது யார் என்ற இழுபறி சரத் பொன்சேகாவுக்கும், கோத்தபாய ராஜபக்சவுக்கும் இடையில் நடந்து கொண்டிருக்கிறது.
மற்றொரு பக்கத்தில் போரை வென்ற அரச தலைவர் யார் என்ற போட்டி மகிந்தவுக்கும் ரணில் - சந்திரிகா கூட்டணிக்கும் நடந்து கொண்டிருக்கிறது.
விடுதலைப் புலிகளை தோற்கடித்தது தாமே என்று உரிமை கோருவதற்காக இந்தத் தரப்புகள் கடந்த ஏழு ஆண்டுகளாக முட்டி மோதிக் கொண்டிருக்கின்றன.
சரத் பொன்சேகா இல்லாவிட்டாலும் யாரேனும் ஒரு அதிகாரியை வைத்து போரை வென்றிருப்போம் என்று முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச முன்னர் கூறியிருந்தார்.
advertisement
அண்மையில் அவர் சரத் பொன்சேகாவை இராணுவத் தளபதியாக நியமித்தமைக்காக மகிந்த ராஜபக்சவும் தானும் தம்மைத் தாமே சாட்டையால் அடித்துக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
அந்தளவுக்கு இருவருக்குமிடையில் நிழல் போர் நடந்து கொண்டிருக்கிறது. போர் வெற்றிக்கு சரத் பொன்சேகா காரணம் அல்ல என்று நிரூபிக்க கோத்தபாய ராஜபக்ச பெரு முயற்சிகளை எடுத்தார்.
அதன் ஒருகட்டமாகவே கோத்தாவின் போர் என்ற பெயரில் சிங்கள ஊடகவியலாளரான சந்திரபிரேமவை வைத்து நூல் ஒன்றையும் எழுத வைத்தார். அது ஒட்டுமொத்த போரின் வெற்றிக்கும் கோத்தபாய ராஜபக்சவே காரணம் என்பதை வலியுறுத்துகிறது.
அதேவேளை சரத் பொன்சேகாவோ போரின் வெற்றியில் பங்களிக்காதவர் கோத்தபாய ராஜபக்ச என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருக்கிறார்.
புலிகளின் தாக்குதல் அச்சத்தினால் இராணுவத்தை விட்டு விலகிச் சென்றவர் என்றும் போர் உத்திகளைப் பற்றி ஒன்றும் தெரியாதவர் என்றும் கோத்தபாயவை மட்டம் தட்டி வந்திருக்கிறார்.
தனது போர் உத்திகளும் இராணுவ பலத்தைக் கட்டியெழுப்பிய தனது தலைமைத்துவமும் தான் புலிகளைத் தோற்கடித்ததாக வலுவாக நம்புகிறார் சரத் பொன்சேகா.
அதேவேளை தன்னைப் பழிவாங்கிய மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச சகோதரர்கள் போர் வெற்றியில் பங்களிக்காதவர்கள் என்றும் போரைப் பற்றி எதுவும் அறியாதவர்கள் என்றும் கடுமையாக விமர்சித்தும் வருகிறார். அவர்களைப் பழிவாங்கும் மனோநிலை அவருக்குள் இருப்பதையும் உணரமுடிகிறது.
இன்னொரு பக்கத்தில் மகிந்த ராஜபக்ச தனது அரசியல் தலைமைத்துவத்தினால் தான் போர் வெற்றி கொள்ளப்பட்டது என்று மார்தட்டி வந்திருக்கிறார். முப்பதாண்டு போரை தான் மூன்று ஆண்டுகளில் முடித்து வைத்தவர் என்றும் அதற்கு தனது உறுதியான முடிவுகளே காரணம் என்றும் வலுவாக நம்புகிறார் அவர்.
அவரது இந்த நிலைப்பாட்டை வலியுறுத்தும், நம்புகின்ற மக்களும், அரசியல் பிரமுகர்களும் நிறையவே இருப்பது அவரது பலம்.
ஆனால் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்தது தனியே இறுதி மூன்று ஆண்டுகளில் நடந்த போரில் மட்டுமல்ல. அதற்கு முன்னர் தாம் முன்னெடுத்த இரகசியப் போர் தான் காரணம் என்கிறது சந்திரிகா - ரணில் கூட்டணி.
2002ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும் ரணில் விகரமசிங்கவின் அரசாங்கத்துக்கும் போர் நிறுத்த உடன்பாடு கையெழுத்திடப்பட்ட போது ஜனாதிபதியாக இருந்தவர் சந்திரிகா குமாரதுங்க. அப்போது அவரும் ரணிலும் எதிரெதிர் முகாம்களிலேயே இருந்தனர். இப்போது அவர்கள் ஒரே அணியில் இருக்கின்றனர்.
சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்த போதும் ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த போதும் முன்னெடுக்கப்பட் இரகசிய நடவடிக்கைகள் இறுதிப்போரில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதில் சந்தேகமில்லை.
கடந்த வாரம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர 20 பக்க கடிதமொன்றை எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில் அவர் பல உண்மைகளை வெளிப்படுத்தியிருந்தார்.
போரில் வெற்றியைப் பெற்றுக் கொடுத்ததாக கூறிக்கொண்டு திரியும் மகிந்த ராஜபக்சவுக்கு உண்மையில் போரின் வெற்றிக்கான காரணங்கள் என்ன என்பதை மங்கள சமரவீர அதில் விரிவாக விபரித்துள்ளார்.
1994ல் ஐதேக ஆட்சியில் இருந்தபோது ஜனாதிபதியாக இருந்த டி.பி.விஜேதுங்கவினால் கிழக்கு மாகாணம் கைப்பற்றப்பட்டமை, 1995ம் ஆண்டு சந்திரிகா குமாரதுங்கவினால் யாழ். குடாநாடு கைப்பற்றப்பட்டமை, மற்றும் கிழக்கின் பல பகுதிகளின் கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தியமை என்பன முன்னைய அரசாங்கங்களினால் போரை வெற்றி கொள்வதற்கான முக்கிய நகர்வுகள் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
போரின் 75வீதம் தான் ஆட்சியில் இருந்த போதே முடிந்து விட்டதாகவும் எஞ்சிய 25 வீதத்தையே மகிந்த ராஜபக்ச முடித்து வைத்ததாகவும் சந்திரிகா குமாரதுங்கவும் ஒருமுறை கூறியிருந்தார்.
சந்திரிகா ஆட்சிக்காலத்தில் வெளிவிவகார அமைச்சராக இருந்த லக்ஸ்மன் கதிர்காமரின் முயற்சியால் அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் புலிகள் இயக்கத்துக்கு தடைவிதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டமையும் புலிகளைத் தோற்கடிப்பதில் முக்கிய பங்கை வகித்திருந்ததாக மங்கள சமரவீரவின் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதற்குப் பின்னர் 2001ம் ஆண்டு தொடக்கம் 2004ம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த ரணில் விக்ரமசிங்க அரசாங்கமே விடுதலைப் புலிகளைின் கழுத்தில் கடைசி முடிச்சைப் போட்டது.
சமாதானப் பேச்சுக்களைப் புலிகளுடன் ஆரம்பித்த ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் ஒரு பக்கத்தில் பேச்சுக்களை நடத்திக் கொண்டே இன்னொரு பக்கத்தில் புலிகளுக்கு எதிரான சர்தேச வலைப்பின்னல் ஒன்றை உருவாக்கியது.
அரசியல் ரீதியாகப் புலிகளைப் பலவீனப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடா என்பன புலிகள் மீது தடையை விதிக்க நடவடிக்கை எடுத்தன.
இந்தத் தடையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்தது அமெரிக்கா தான் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார் மங்கள சமரவீர. அப்போதைய இராஜாங்க செயலர் கொண்டலீசா ரைஸ் மற்றும் பிரதி இராஜாங்கச் செயலர் நிக்கலஸ் பேர்ன் ஆகியோரே ஐரோப்பிய ஒன்றியத்தையும் கனடாவையும் இந்த முடிவை எடுக்கச் செய்ததற்குக் காரணம்.
இவர்களின் ஆதரவு இல்லாவிட்டால் இது சாத்தியமாகியிருக்க முடியாது என்று அடித்துச் சொல்லியிருக்கிறார் மங்கள சமரவீர.
புலிகளைத் தோற்கடிப்பதற்கு ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் இரண்டு வகையில் காரணமாக இருந்தது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
கருணாவைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரித்தெடுத்தது, அதன் மூலம் புலிகள் பலவீனப்படுத்தப்பட்டதுடன், அவர் மூலம் பெருமளவு புலனாய்வு மற்றும் புலிகளின் போரிடும் முறைகள் குறித்த இரகசியங்களை அரசாங்கம் பெற்றுக் கொண்டது என்றும் அவர் கூறியிருக்கிறார்.
இன்னொரு காரணம் அமெரிக்காவுடன் ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் செய்து கொண்ட அணுகல் மற்றும் குறுக்கு சேவைகள் உடன்பாடு .
இதற்கமைய புலிகளின் சர்வதேச விநியோக வலையமைப்புகள் அறுக்கப்பட்டன. கடல்வழி ஆயுத விநியோக வழிகளைக் கண்டறிவதற்கான ராடர் தொழில் நுட்பங்களையும் அதற்கான பயிற்சிகளையும் அமெரிக்காவே வழங்கியது. ஆழ்கடலில் கண்காணிப்பை மேற்கொள்வதற்காக அதிநவீன கண்காணிப்பு சாதனங்கள் பொருத்தப்பட்ட இரண்டு பீச் கிராப்ட் விமானங்களையும் அமெரிக்கா கொடுத்தது.
இது இறுதிக்கட்டப் போரில் புலிகள் வெளி விநியோகங்களின்றி தனிமைப்படுத்தப்படுவதற்கு பிரதான காரணமாகியது.
தென்னிலங்கை அரசியல் இராணுவத் தலைமைகள் புலிகளைத் தோற்கடித்தமைக்கான பெருமையை தமதாக்கிக் கொள்வதற்கு போட்டி போட்டுக் கொண்டாலும் உண்மையில் புலிகளைத் தோற்கடித்தது ஒரு கூட்டுமுயற்சியே, கூட்டு நகர்வேயாகும்.
டி.பி.விஜேதுங்க, மகிந்த, சந்திரிகா, ரணில் போன்ற அரசியல் தலைமைகள் சரத் பொன்சேகா, கோத்தபாய ராஜபக்ச போன்ற இராணுவத் தலைமைகள் அமெரிக்காவின் அதிநவீன தொழில்நுட்ப உதவிகள், அமெரிக்காவின் இராஜதந்திர உதவி, ஏனைய நாடுகளின் ஒத்துழைப்பு எல்லாமேதான் புலிகளைத் தோற்கடித்திருக்கின்றன.
இதனை மங்கள சமரவீரவின் கடிதம் ஏற்றுக்கொள்கிறது.
ஆனால் தனது போர் வெற்றி வரலாறு நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக மகாவம்சத்தில் புதிய அத்தியாயங்களைச் சேர்த மகிந்த ராஜபக்ச இதனை ஒப்புக்கொள்வாரா?

No comments:
Post a Comment