May 17, 2016

வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுங்கள்- சி.வி.விக்னேஸ்வரன்!

வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவதுடன், பொலிஸ் அதிகாரத்தினை மாகாண சபைக்கு வழங்குங்கள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வந்து காட்டுகின்றோம் என்று வடக்கு மாகாண
முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள வன்முறைகளை தடுக்க வடக்கு மாகாண சபை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லையே என முதலமைச்சரிடம் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளதாவது, “வடக்கில் ஆயிரக்கணக்கான இராணுவத்தினரும் கடற்படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு இருந்தும் இங்கு வன்முறைகள் தொடர்ந்து இடம்பெறுகின்றன என்றால், ஏதோ ஓர் இடத்தில் பிரச்சினை உள்ளது என்றே அர்த்தம்.
வடக்கில் இருந்து இராணுவம் முற்றாக வெளியேற்றப்பட்டு பொலிஸ் அதிகாரத்தை மாகாண சபையிடம் வழங்கினால் யாழ்ப்பாணத்தில் அரங்கேறும் வன்முறை கலாசாரத்தை உடனடியாகக் கட்டுப்படுத்துவோம்.
வடக்கில் இராணுவத்தை முடக்கி வைத்திருப்பதன் மூலம் வன்முறைகளையோ அல்லது பிரச்சினைகளையோ முடிவுக்கு கொண்டு வர முடியாது. வடக்கில் இருந்து இராணுவம் முற்றாக வெளியேற வேண்டும்.
இராணுவம் முகாமுக்குள் முடங்கியிருப்பதாகக் கூறப்படுகின்ற போதும் அவர்கள் ரோந்து செல்வதை அவதானிக்க முடிகிறது. இதனால் மக்கள் இன்னமும் அச்சத்துடனே இருக்கின்றனர். எனவே இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும் என்ற கருத்தில் மாற்றமே இல்லை.” என்றுள்ளார்.

No comments:

Post a Comment