கல்முனை பிரதேசத்தில் சர்வதேச சிறுவர் தினம்
நிகழ்வுகள் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் ஏற்பாட்டில் இன்று (01) இடம்பெற்றது.
சிறுவர் தின நிகழ்வுகளின்போது சிறுவர் துஷ்பிரயோக வீதி நாடகங்கள், வீதி ஊர்வலங்கள், விழிப்பூட்டும் துண்டுப் பிரசுரங்கள் என்பனவும் வழங்கிவைக்கப்பட்டது.
அந்தத்
தொடரில் கல்முனை அல்-பஹ்ரியா மகா வித்தியாலய மாணவர்களின் சிறுவர் தின
ஊர்வலப் பேரணி கடற்கரை பள்ளி வீதி, செயிலான் வீதி ஊடாக நடைபெற்றது. பாடசாலை
மாணவர்கள் ஆசிரியர்களும் இதில் சிறப்பாக கலந்து கொண்டனர்.
(எஸ்.அஷ்ரப்கான்)
No comments:
Post a Comment