October 11, 2015

மன்னார் நகரில் வர்த்தக நிலையங்களில் இரவு வரை கடமையாற்றும் பெண்கள்.!

பெற்றோர்கள், சமூக ஆர்வலகர்கள், புத்திஜீவீகள் விசனம்…….
மன்னார் நகரில் காணப்படும் வர்த்தக நிலையங்களில் வேலை செய்கின்ற பெண்கள் தாமதமாகவே வீடு வந்து சேருவதாக பெற்றோர்கள், சமூக
ஆர்வலகர்கள், புத்திஜீவிகள் Voiceof Justice குழுவிற்கு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கருத்துக்கள் தெரிவிக்கையில் மன்னார் பஜார் பகுதியில் கடைகளில் வேலை செய்யும் பெண்கள் தாமதமாகவே வீடு செல்ல அனுமதிக்கப்படுவதாகவும், இதனால் பெண்கள் பல்வேறு பட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதாகவும் பெற்றோர்களும், சமூக ஆர்வலகர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.

மன்னார் பஜார் பகுதியில் பல கடைகள் காணப்பட்டாலும் வறுமைகளின் காரணமாகவும், பொருளாதார கஸ்ரத்தின் மத்தியிலும் பெண்கள், இளம் யுவதிகள் என பலரும் வேலைகளில் இனைந்து வேலை செய்துக்கொண்டு வருகின்றார்கள் இவர்களில் அதிக அளவானவர்கள் இளம் யுவதிகளாக காணப்படுகின்றார்கள்.

குறித்த யுவதிகள் ஒவ்வொரு நாளும் காலை 8:30மணிக்கு சமூகம் கொடுப்பதாகவும் மாலை 6:30 மணிக்கு பிற்பாடே வீடு செல்ல அனுமதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்ட யுவதியின் பெற்றோர் voice justice குழுவினரிடம் தெரிவித்துள்ளனர்.

ஒரு மனிதன் சராசரியாக 8 மணித்தியாளம் வேலை செய்கின்றார்கள் ஆனால் இந்த பஜார் பகுதியில் காணப்படும் சி கடை உரிமையாளர்கள்  மாலை 6:30 மணிக்கு பெண்களை வீடு செல்ல அனுமதிக்கின்ற போதும் பல கடை உரிமையாளர்கள் தாங்கள் கடைகளை மூடும் வரைக்கும் பெண்களையும், யுவதிகளையும் நிறுத்தி வைப்பதாக பல குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இருந்தும் காலை 8:30மணிக்கு வேலைக்கு சமூகம் அளிக்கும் பெண்கள் இரவு 8:30மணிக்கு வீடு திரும்ப வேண்டிய சூழ் நிலை காணப்படுவதோடு இரவு நேரத்தில் தனியாக வீடு செல்லும் பெண்கள் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதாக voice justice குழு சுட்டிக்காட்டி நிற்கின்றது.

இதை வேளை கதைகளில் வேலை செய்யும் ஆண்கள் சிலர் பெண்களுடன் இரட்டை அர்த்தத்தில் கதைகள் கதைப்பதும், உடல் அங்கங்களில் தொட்டுக்கதைப்பதும், கடைகளுக்கு வரும் பெண்களை வலு கட்டாயமாக கைகளை பிடித்து வியாபாரம் செய்வதும் மிகவும் கூடுதலாக காணப்படுவதாக voice justice குழு சுட்டிக்காட்டுவதுடன் இவ்வாறான சரயற்பாடுகள் மிகவும் கண்டிக்கத் தக்கதாகவும் voice justice குழு சுட்டிக்காட்டி நிற்கின்றது.

எனவே  பஜார் பகுதிகளுக்கு வேலைகளுக்கு வந்து போகும் இந்த இளம் யுவதிகள், பெண்கள் விடயத்தில் மன்னார் வர்த்தக சங்கமும், மாதர் அபிவிருத்தி ஒன்றியம், சிவில் அமைப்புக்கள்

1.உடனடியாக இந்த விடயத்திற்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும்

2. வர்த்தக உரிமையாளர்களை உடனடியாக வர்த்தக சங்க நிர்வாகம் கூட்டி உடனடியாக இவர்களுக்கான சரிதான தொரு தகவல்களை கொடுக்க வேண்டும்.

3. பெண்களின் வேலைக்கான நேரங்களை காலை 8:30மணி தொடக்கம் மாலை 5:30மணிக்கு அமுல்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4. பெண்கள் அமைப்புக்கள் இந்த பெண்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு உரிய வர்த்தக உரிமையாளர்களுடன் கலந்துரையாடி தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும்

இவ்வாறு பலதரப்பட்ட செயற்பாடுகளை வர்த்தக சங்கங்களும், கடை உரிமையாளர்களும், பெண்கள் அமைப்புக்களும்,  சிவில் அமைப்புக்களும் சேர்ந்து செயற்படுத்துவதன் மூலம் இவ்வாறான பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என voice justice குழு கோரிக்கை விடுத்து நிற்கின்றது.

எனவே குறிந்த இந்த பெண்கள் யுவதிகள் வர்த்தக நிலையங்களில் வேலை செய்து வீட்டு உரிய நேரத்திற்கு வீடு செல்ல தீர்வினை பெற்றுக் கொடுக்கும் படியாக voice justice குழு கேட்டு நிற்கின்றது.

No comments:

Post a Comment