October 12, 2015

தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2015 – யேர்மனி(படங்கள் இணைப்பு)

விண்ணிலும் மண்ணிலும் போராடி கடலிலும் கரையிலும் களமாடி, விளைநிலத்துக்காக வித்தாகிப் போன புனிதர்களை நினைவுகூர்ந்து ஒன்றாக அவர்களுக்கு வணக்கம் செலுத்தும் நாள் நவம்பர் 27.தமிழீழ விடுதலைக்காக
தம்முயிரை அர்ப்பணம் செய்த மாவீரர்களுக்கான உயரிய நாள் இது.எமது தாயகமாம் தமிழீழ நாட்டின் தேசிய நாட்களில் மாவீரர் நாள் மிக முக்கிய நாளாகும். மாவீரர் நாள் என்பது தமிழீழத்தின் விடிவிற்காகவும் உயிரைத் தற்கொடையாக ஈய்ந்து இந்த மண்ணிற்கே உரமாகி விட்டவர்களினதும் எமது மூச்சுடன் கலந்து விட்டவர்களினதுமாகிய நினைவு நாளாகும்.“எங்கள் சுதந்திர இயக்கத்தின் தூண்களாக இருக்கும் மாவீரர்களே! உங்கள் இரத்தத்தால் எங்கள் விடுதலை வரலாறு மகத்துவம் பெறுகின்றது. உங்கள் இலட்சிய நெருப்பால் எங்கள் போராட்டம் புனிதம் பெறுகின்றது. உங்கள் தியாகத்தால் எங்கள் தேசியம் உருவாக்கம் பெறுகின்றது. உங்கள் நினைவுகளால் எங்கள் உறுதி வைரம் பெறுகின்றது” என்று மாவீரர்களின் தியாகத்தை விழித்துக் கூறியுள்ளார் தேசியத் தலைவர்.இந்த எமக்குரிய உயரிய நிகழ்வைத் தத்துவார்த்தமாகவும் உணர்வுபூர்வமாகவும் நிலை நாட்டி நினைவு கூர எமது யேர்மன் வாழ் தமிழீழ மக்கள் அனைவரினதும் மனமுவந்த ஒருங்கிணைந்த பங்களிப்புக்களை வேண்டி நிற்கின்றோம்.

யேர்மனியில் தமிழீழ தேசிய மாவீரர் நாள் நடைபெறும் முகவரி பின்வருமாறு :
Hellmut Körnig Halle
Strobelallee 40
44139 Dortmund

                                                                                                   மாவீரர் பணிமனை
                                                                       தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – யேர்மனி


No comments:

Post a Comment