சட்ட விரோதமான முறையில் பிபிலை பிரதேசத்தில் இருந்து
ஏறாவூர் பிரதேசத்திற்கு கொண்டு சென்ற ஏழு லட்சம் ரூபா பெறுமதியான முதிரை
மரங்களை வாழைச்சேனை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
பிபிலை பிரதேசத்தில் இருந்து சட்ட விரோதமான முறையில் மரக்குற்றிகள் கடத்தப்படுவதாக வாழைச்சேனை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, வாழைச்சேனை பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் எம்.அருணகாந் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்படி மரக்குற்றிகளை கைப்பற்றினர்.
மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் மாவடிச்சேனை எனும் இடத்தில் வைத்து லொறியை பரிசோதனை செய்த போதே உமி மூடைகளால் மறைக்கப்பட்ட நிலையில் முதிரை மரங்களை ஏற்றி வந்தது தெரிய வந்துள்ளது.
முதிரை மரக்குற்றிகள் ஐம்பத்தி நான்கும் (54) அதனை ஏற்றி வந்த லொறியும் சந்தேக நபர் ஒருவரும் வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் லொறி மற்றும் முதிரை மரக் குற்றிகளையும் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment