September 1, 2015

நாடாளுமன்றில் உரையாற்றவுள்ள மைத்திரி! பல விடயங்கள் அம்பலமாகும் என எதிர்பார்ப்பு!

இலங்கையின் எட்டாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட உரையினை ஆற்றவுள்ளார்.
தனது உரையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் இராணுவத்தினரை யுத்த குற்றச்சாட்டில் இருந்து விடுவிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் வெளியப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மாளிகையில் இருந்து கிடைத்த தகவல்களின் மூலம் தெரியவந்துள்ளது.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதன் பின்னர் சர்வதேசங்களுடன் மேற்கொண்ட கொடுக்கல் வாங்கல்களின் போது அவர் அதிகமாக அவதானம் செலுத்தியது குறித்த விடயம் தொடர்பில் என வெளிப்படுத்தவுள்ளார்.
அத்துடன் ஜனாதிபதியின் விசேட வெளியுறவுக் கொள்கைகள் காரணமாக அமெரிக்க போன்ற முக்கிய நாடுகளிலும் எங்கள் நாட்டின் தோற்றத்தில் காணப்பட்ட கெட்ட பெயர்கள் இதுவரையில் குறைவடைந்துள்ள நிலைமை காணப்படுகின்றமை தொடர்பிலும் ஜனாதிபதி சுட்டிக்காட்டவுள்ளார் என நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த காலங்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மீண்டும் அரசியல் மேடைகளுக்கு கொண்டு வருவதற்கு செயற்பட்ட சிலர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டை காட்டிகொடுத்ததோடு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மின்சார நாற்காலிக்கு அனுப்ப முயற்சிப்பதாக குற்றம் சுமத்தியமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment