September 18, 2015

இலங்கையின் போர்க்குற்றங்களை விசாரிக்க சர்வதேச தீர்ப்பாயமே சரியானது!

இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச தீர்ப்பாயம் ஒன்றின் அவசியம் குறித்து பிரித்தானியாவை மையமாகக்கொண்ட சர்வதேச இனப்படுகொலை தடுப்பு மற்றும் வழக்கு நிலையம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் குறித்த நிலையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் இலங்கையின் படையினரின் குற்றங்கள், சர்வதேச சட்டங்களை மீறும் வகையில் அமைந்துள்ளன. இதனை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையின் மூலம் தெரிந்துக்கொள்ள முடிகிறது.
இந்தநிலையில் குறித்த குற்றங்களுக்கு இணை இராணுவத்தலைமைகள், நடவடிக்கை இராணுவத்தினர் ஆகியோரின் பொறுப்பு என்பது தெரியவருகிறது.
அத்துடன் முப்படையினரின் தளபதி என்ற வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே இதற்கு முழுப்பொறுப்பை ஏற்கவேண்டும். அத்துடன் களத்தில் இருந்து தளபதிகளையும் இலகுவில் இனங்காணமுடியும்.
எனவே இதனை விசாரணை செய்ய உரிய சர்வதேச பொறிமுறை ஒன்று தேவை என்று குறிப்பிட்டுள்ள சர்வதேச இனப்படுகொலை தடுப்பு மற்றும் வழக்கு நிலையம், சர்வதேச தீர்ப்பாயம் ஒன்றே இதற்கு சரியான தீர்வாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment