September 15, 2015

யாழ் கோப்பாயில் படையினரின் தேவைக்காக காணி சுவீகரிப்பு தோல்வி!

யாழ்ப்பாணம்- கோப்பாய் பகுதியில்படையினரின் தேவைகளுக்காக பொதுமக்களுக்குச் சொந்தமான ஒரு தொகுதி நிலத்தை சுவீகரிப்பிற்காக அளவீடு செய்வதற்கு நில அளவையாளர்கள்  முயற்சித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த அளவீட்டுக்கு காணி உரி மையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அளவீடு நிறுத்தப்பட்டுள்ளது.
கோப்பாய்- கைதடி வீதியில் 28 குடும்பங்களுக்குச் சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் படை யினர் நிலைகொண்டிருக்கின்றனர். இந்நிலையில் குறித்த 10 ஏக்கர் நிலத்தில் ஒன்றரை ஏக் கர் நிலத்தை படைமுகாம் அமைப்பிற்காக சுவீகரிப்பதற்காக அளவீடு செய்யவுள்ளதாக காணி உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த காணிக்கு, சொந்தமான சில குடும்பங்களும், வடமாகாணசபை உறுப்பினர்களான ஆ.பரஞ்சோதி, எஸ். சுகிர்தல், பா.கஜதீபன் ஆகியோர் குறித்த பகுதிக்குச் சென்றிருந்தனர். இந்நிலையில் அங்கு நில அளவையாளர்கள் சுவீகரிப்பிற்காக காணியை அளவீடு செய்யவிருந்த நிலையில், தமது காணிகளை சுவீகரிக்க தாம் அனுமதிக்கப்போவதில்லை. என காணி உரிமையாளர்கள் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் காணி உரிமையாளர் களின் ஒப்புதல் இல்லாமல் காணி அளவீடு செய்ய முடியாதென கூறி நில அளவையாளர்கள் அங்கிருந்து விலகிச் சென்றதுடன், பொதுமக்கள் காணி அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்பதுதொடர்பாக தாம் கோப்பாய் பிரதேச செயலாளருக்கு, தகவல் கொடுப்பதாக கூறிவிட்டு நில அளவையாளர்கள் விலகிச் சென்றுள்ளனர்.
இதேவேளை யாழ்.மாவட்டத்தில் படையினர், பொலிஸார், மற்றும் கடற்படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட்டிருக்கும் 28 இடங்களை காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்போவதாக அண்மையில் படையினர் தெரிவித்திருந்த நிலையில், மீண்டும் மக்களுடைய காணிகளை படையினர் தமது தேவைகளுக்காக சுவீகரிக்கவும் சுவீகரிப்பிற்காக அளவீடு செய்யவும் முயற்சித்து வருகின்றமை தொடர்பாக மக்கள் தமது அதிருப்தியை தெரிவித்திருக்கின்றனர்.
இதேவேளை நேற்றய தினம் எதிர்ப்பு தெரிவித்த காணி உரிமையாளர்கள் கருத்து தெரிவிக்கையில் முன்னைய ஆட்சியில் எங்களுடைய, நிலங்கள் அனுமதி பெற்றாமலேயே அளக்கப்பட்டும், சுவீகரிக்கப்பட்டும் இருந்த நிலையில் நாம் வீதி வீதியாக நின்று போராட்டங்களை நடத்தி எங்கள் காணிகளை மீட்டெடுப்பதற்காக குரல் கொடுத்திருந்தோம். அது புதிய அரசாங்கத்தில் இருக்காது என நாங்கள் நம்பிய நிலையில் மீண்டும் எங்கள் காணிகளை அளவீடு செய்வதற்கு முயற்சிக்கப்படுகின்றது.
எனவே இந்த விடயம் தொடர்பாக பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிக ள் கவனத்தில் எடுத்து எங்களுடைய காணிகளை எங்களிடமே வழங்குவதற்கு உhயி நடவடி க்கைகளை எடுக்கவேண்டும் என உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளதுடன், எங்கள் கா ணிகளை படையினருக்கு வழங்கமாட்டோம் எனவும் உறுதிபட தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment