கடந்த சில மாதங்களுக்கு முன் சீட்டுப் பிடித்ததில் ஏற்பட்ட நிதி மோசடி காரணமாக இளம் குடும்பப் பெண் இரு மாதங்கள் சிறைக்குள் அடைக்கப்பட்டிருந்தாள். அந்த இரு மாதங்களும் தான் பட்ட நரக
வேதனையை தனக்கு தெரிந்த ஊடகவியலாளர் ஒருவரிடம் சொல்லியுள்ளாள்.விபச்சாரம், சாராயம் காய்ச்சி, விற்றுப் பிடிக்கப்பட்டு யாழ்ப்பாணச் சிறைச்சாலைக்குள் அடைக்கப்படும் பெண்கள் கடும் அட்டகாசங்கள் புரிவதாகவும் தங்களுக்கு பணிவிடை செய்யாதவர்களை அவர்கள் சிறைக்குள்ளேயே வைத்துத் தாக்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இரவு வேளைகளில் தமக்கு விரும்பிய பெண்களுடன் அவர்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளார். அதற்கு மறுப்பவர்களை கடுமையான முறையில் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.அவர் இது பற்றித் தெரிவித்த போது ‘கசிப்புக் காய்ச்சி பிடிக்கப்பட்ட சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் என்னையும் இவ்வாறு ஓரினச்சேர்க்கைக்கு அழைத்த போது நான் மறுத்தேன். உடனே எனது அந்தரங்கத்தில் காலால் உதைந்துவி்ட்டு பின்னர் இன்னொரு பெண்ணுடன் வந்து என்னை அச்சுறுத்தினாள்.
நான் மறுத்த போது ”கீழே படுடி” என்று கூறி என்னை இருவருமாகச் சேர்ந்து நிலத்தில் பிடித்துத் தள்ளிவிட்டு ஒருத்தி என்னைப் பிடித்திருக்க மற்றவள் என்னை வதைத்தாள் என தெரிவித்ததுள்ளார்.அத்துடன் சிறைச்சாலையில் இரவு வேளைகளில் இயற்கை உபாதைகளுக்கு செல்ல முடியாது என்றும் சாக்கு ஒன்றைப் போட்டே அதில் சிறுநீர் கழிப்பதாகவும் தெரிவித்துள்ளாள்.சிறைச்சாலைக்குள் தரப்படும் உணவு வகைகளையும் உறவினர்கள் கொண்டுவரும் உணவு வகைகளையும் இவ்வாறான ரவுடித்தனமான பெண் கைதிகள் பறித்துச் சாப்பிட்டுவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment