August 27, 2015

பரகுவே நாட்டு அரசுடன் சந்திப்பு – அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை (ICET)!(படங்கள் இணைப்பு)

அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையின் வெளிவிவகார அரசியல் குழுவின் இணைப்பாளர் திரு திருச்சோதி அவர்கள் பரகுவே அரசாங்கப்பிரதிநிதிகளுடன் முக்கியமான அரசியல் சந்திப்புகளை   ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை மேற்கொண்டார்.

அந்நாட்டு பாராளுமன்ற வெளிவிவகாரக்குழு, செனட் சபையின் வெளிவிவகாரக்குழு, செனட் சபை தலைவர், அந்நாட்டு ஜனாதிபதியின் பிரதம காரியதரசி ஆகியோரை சந்தித்து தமிழின அழிப்புகான  அனைத்துலக சுயாதீன விசாரணையை மற்றும் தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாசையை தீர்மானிக்கும் வகையில் பொதுவாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி அத்தோடு  நடைபெற  இருக்கும் மனிதவுரிமை சபையின் விசாரணை அறிக்கை, வட மாகாண சபையின் இனப்படுகொலைக்கான பிரேரணை விடையமாகவும் உரையாடப்பட்டது .
அத்துடன் இலங்கைத் தீவில்  ஈழத்தமிழர்கள்  முற்றுமுழுதாக அழிக்கப்படும் நடவெடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. அதை தடுக்க வேண்டிய கடமை எல்லா நாட்டு அரசுகளுக்கும் இருக்கிறது என்பதை வலியுறுத்தி கூறப்பட்டது.இறுதியில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை சார்பாக பேசப்பட்ட விடையங்களை உள்ளடக்கிய ஆவணங்கள் கையளிக்கப்பட்டது .

இச் சந்திப்பில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதிகளும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது .
Paraquay 292Paraquay 146Paraquay 292Paraquay 377Paraquay 300

No comments:

Post a Comment