August 2, 2015

மாலை மரியாதை கேட்கும் கூட்டமைப்பு தலைகள்!

வடமாகணத்திலுள்ள பெரும்பாலான உள்ளுராட்சி சபைகளின் காலம்  நேற்று முன்தினம் முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் கூட்டமைப்பு வசமிருந்த உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் தம்மை கௌரவிக்கவேண்டுமென
பணியாளர்களை நிர்ப்பந்தித்து வருவதாக அஞ்சப்படுகின்றது.
அவ்வகையில் வலி.வடக்கு பிரதேசசபை தவிசாளருக்கு பிரியாவிடை இடம்பெற்று ஒன்றரை பவுண் தங்கசங்கிலி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக வேலை செய்யும் ஊழியர்களிடம் ஜநூறு ரூபாய் வீதம் வலுகட்டாயமாக பறிக்கப்பட்டுள்ளது. வுழங்க மறுத்தால் சம்பளத்தில் வெட்டப்படுமென செயலாளர் மிரட்டியுள்ளார். இந்நிகழ்விற்கு துணை தவிசாளரையோ உறுப்பினர்களையோ அழைக்கவில்லை. இரவு மதுபான விருந்துபசாரமும் இடம் பெற்றிருந்ததாக தெரியவருகின்றது.
இந்நிகழ்வு மாவை, சிறீதரன் ,சுமந்திரன் போன்றவர்களுக்கான பிரச்சார கூட்டமாகவும் மாறியிருந்ததாக பணியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தவிசாளர் பிரதேசசபை வாகனத்தில் மனைவி பிள்ளைகளை ஏற்றி இறக்கியதும் தனது வேலை இடை நிறுத்தப்பட்டவுடன் ஆளுநரின் காலை பிடித்து வேலை எடுத்தது. ஈ.பி.டி.பி உறுப்பினர்களின் பிள்ளைகள் சகோதரர்களுக்கு பிரதேச சபையில் வேலை கொடுத்தது. பிரதேசசபை வாகனத்தில் டீசல் எடுத்து விற்பது. ஒப்பந்தகாரர்களிடம் இலஞ்சம் வாங்குவது. முன்னாள் போராளிகளுடன் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி முரண்படுவது. மக்களுக்கு தண்ணீர் இல்லாவிட்டாலும் பொலிஸ் கடற்படை போன்றவர்களுக்கு தண்ணீர் வழங்கி விசுவாசம் காட்டுவது. முகாம்களில் வசிக்கும் மக்களை தரக்குறைவாகபேசுவது போன்ற சேவைகளை மக்களுக்காக வழங்கியுள்ளார் என பணியாளர்கள் தரப்பில் புகார் பட்டியல் வாசிக்கப்படுகின்றது.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் சுமந்திரனின் தீவிர ஆதரவாளராக சுகிர்தன் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment