August 7, 2015

மஹிந்த இனவாதம் பேசியே பிரசாரம் செய்து வருகிறார்: சிவாஜிலிங்கம்!

மஹிந்த ராஜபக்ஷவிற்கு இனவாதத்தினை விட்டால் வேறு வழியில்லை. இனவாதக் கருத்துக்களை முன்வைத்தே தன் வாழ்நாளை கழித்து வருகிறார்
என்று வடமாகாண சபை உறுப்பினரும், குருநாகல் மாவட்ட வேட்பாளருமான கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில், யாழில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இடம்பெற்றுள்ள விடயங்கள் தொடர்பில் அவர் கூறுகையில்,
இறுதி போரின் போது, இராணுவத்தில் சரணடைந்த 6000 பேர் மற்றும் காணாமல் போன 18 ஆயிரம் பேர் பற்றி சிறீலங்கா அரசு தமது நிலைப்பாட்டினை அறிவிக்க வேண்டும். அனைத்து அரசியல் கைதிகளும் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட வேண்டும். பயங்கரவாத தடைச் சட்டத்தினை உடனடியாக நீக்க வேண்டும்.
தமிழர் தாயகத்தில் சிங்கள குடியேற்றங்களை உடனடியாக நிறுத்தி இராணுவத்தினை வெளியேற்ற வேண்டும். உயர் பாதுகாப்பு வலயத்தினை முற்றாக நீக்க வேண்டும். இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களை நிரூபிக்கும் வகையில், ரோம் உடன்படிக்கையில் கைச்சாத்திட வேண்டும்.
அத்துடன் சிறீலங்கா அரசு சமஸ்டி ஆட்சியை வழங்காவிட்டால், ஐக்கிய நாடுகள் சபை தலையிட்டு வடகிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பினை நடாத்தி தமிழ் மக்களுக்கான தீர்வினை பெற்றுக்கொடுக்க ஆவண செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

No comments:

Post a Comment