August 9, 2015

சுரேஷ் பிரேமச்சந்திர அராஜக கொடூர அடக்குமுறை ஆதாரங்கள் வித்தியிடம்..!

சுரேஷ் பிரேமச்சந்திரனும் அவரது ஈ.பி.ஆர்.எல்.எவ் அணியினரும் எண்பதுகளின் கடைசியில் இந்தியப் படைகளோடு இங்கு புரிந்த அட்டகாசங்களை எங்களைப் போன்ற ஊடகவியலாளர்கள் மீதும் ஏவிவிட்ட
அராஜக கொடூர அடக்குமுறைகளை வித்தியாதரன் தெரிவித்துள்ளார்.
யாழ். பிராந்திய பத்திரிகை ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின் முழு வடிவம் இங்கே தரப்பட்டுள்ளது.
நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கோ அல்லது தமிழ் அரசுக் கட்சிக்கோ விரோதமானவன் அல்ல. அண்மைக் காலங்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஏற்பட்டுள்ள உட்பூசல்களுக்கும், நிர்வாகச் சீர்கேடுகளுக்குமே எதிரானவன்.
அதிவிரைவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கைப்பற்றி புதிய இரத்தம் பாய்ச்சி ஆரம்பகாலத்தில் இருந்தது போல உத்வேகத்துடன் இயங்கச் செய்வோம் என்கிறார் ஜனநாயகப் போராளிகள் கட்சி சுயேச்சைக் குழு 4 இன் முதன்மை வேட்பாளரான ந. வித்தியாதரன்.
நேற்று முன்தினம் தனது கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்ட பின் அதன் எதிரொலிப்புகள் தொடர்பாக தமது சகாக்களுடன் தீவிரமாக ஆலோசனை நடத்திக்கொண்டிருந்த வேளையில் குறித்த பிராந்திய பத்திரிகையின் நேர்காணலுக்காக சிறிது நேரத்தை ஒதுக்கிச் செவ்வியளித்தார் வித்தியாதரன்.
அப்போது அவரிடம் எழுப்பிய கேள்விகளுக்கு இப்படிப் பதில் அளித்தார்.
கேள்வி: போராளி அல்லாத ஒருவர் போராளிகளுக்கு தலைமை வகித்து ஜனநாயகப் போராளி எனத் தேர்தலில் போட்டியிடுகிறார் என சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றஞ் சுமத்தி உள்ளார். இதற்கு என்ன கூறப் போகின்றீர்கள்?
பதில்: ஜனநாயகப் போராளிகள் கட்சி வெறுமனே போராளிகளுக்கு மாத்திரமானதல்ல அவர்களின் ஆதரவாளர்கள், போராளிகளின் பெற்றோர்கள், மாவீர்களின் குடுத்பத்தவர்கள் விடுதலைப் புலிகளுடன் தங்களை வெளிப்படையாக அடையாளம் காட்டியதால் கூட்டமைப்பினால் திட்டமிட்டு ஒதுக்கப்பட்டவர்கள் மற்றும் பொதுமக்கள் என எல்லோரும் அதில் உள்ளனர்.
நான் தலைமை வேட்பாளாராக போட்டியிடுவது கூட எனது முடிவல்ல. அவர்களது உயர்மட்டக் கூட்டத்திலிருந்து வெளியே நிற்கும்படி பணித்துவிட்டு கட்சியின் உயர்பீடத்தவர்கள் 15 பேரும் சாதக, பாதகங்களை சீர்தூக்கிப் பார்த்து தீர்மானித்து எடுத்த முடிவுதான் அது. அவர்களின் ஒருமித்த வேண்டுகோளின்படியே நான் இணக்கம் தெரிவித்தேன்.
கேள்வி: நீங்கள் கூட்டமைப்பில் இடம் கேட்டுவந்த போது அதற்கு இடம்கொடுக்க மறுத்ததால் தான் தனித்துப் போட்டியிடுகின்றீர்கள் என்றும் குற்றஞ் சாட்டப்படுகிறதே?
பதில்: சுரேஷ் ஒரு பச்சை உண்மையை முழுமையாக மறைத்து பொய்க்கதை புனைகின்றார். அஞ்ஞான வாசத்திலிருந்து வெளியே வருகின்றவர்களை அசிங்கப்படுத்துவது போல் சுரேஷ் பேசுகின்றார். எம்மால் ஐந்துவீத வாக்குகளைக் கூடப் பெறமுடியாது என்றும் நையாண்டி பண்ணுகிறார்.
கடந்த 25 ஆண்டுகால ஜனநாயக அரசியல் வாழ்வின் பின்னரும் துணிந்து தனது கட்சியில் தனித்து களம் இறங்கி 500 வாக்குகளைக் கூடப் பெற லாயக்கற்ற அவர் கூட்டமைப்பு என்ற முண்டில் நின்று கொண்டுதான் இவ்வளவும் பேசுகின்றார்.
புலிகள் உருவாக்கித் தந்த கொழுகொம்பு இல்லாவிட்டால் அவர் எப்போதோ அடிபட்டுப் போயிருப்பார். சொந்தக் காலில் சொந்தக் கட்சியில் நிற்க முடியாதவர். பகிரங்கமாக அரசியலுக்கு வருவதே ஆபத்து என்ற நிலையிலும் தைரியமாக போராளிகள் துணிந்து களத்தில் இறங்கியதை விமர்சிக்கும் தகுதி சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு இல்லை.
கேள்வி: நீங்கள் இப்படிக் கூறுகின்றீர்கள் ஆனால் நீங்கள் ஒரு போராளி அல்ல என்று தானே அவர் சுட்டிக்காட்டியுள்ளார்?
பதில்: நான் போராளியா என சுரேஷிற்கு எழுந்துள்ள சந்தேகம் வேடிக்கையானது. நானும் இந்த மண்ணுடனும் இந்த விடுதலைப் போராட்டத்துடனும் நின்று தாக்குப் பிடித்த ஒரு ஊடகப் போராளியே, அதற்காக நான் பட்டதுன்ப துயரங்கள், சித்திரவதைகள் அளவிட்டு கூறமுடியாதவை.
ஆனால், சுரேஷ் அவரது ஈ.பி.ஆர்.எல்.எவ் அணியினரும் எண்பதுகளின் கடைசியில் இந்தியப் படைகளோடு இங்கு புரிந்த அட்டகாசங்களை எங்களைப் போன்ற ஊடகவியலாளர்கள் மீதும் ஏவிவிட்ட அராஜக கொடூர அடக்குமுறைகளை துணிச்சலோடு எதிர்கொள்ள எழுந்த எங்களின் உத்வேகமே எங்களையும் உண்மையான போராளிகளாக்கின என்றார் வித்தியாதரன்.

No comments:

Post a Comment