August 8, 2015

யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் 7 கட்சிகள் ஒரே மேடையில்.!

யாழ்.முகாமையாளர் மன்றத்தின் ஏற்பாட்டில் யாழ்.பல்கலைக்கழக பொறியியல்துறை தலைவர் பேராசிரியர் சுப்பிரமணியம் சிவகுமார்
தலைமையில் பொதுத்தேர்தல் 2015 தொடர்பில் ஐந்து கேள்விக்கொத்துக்கள் அடங்கிய கேள்விநேரம் யூரோவில் மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது யாழ். தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல்கட்சிகள், சுயேச்சைக் குழுக்களின் முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கேள்விநேரத்தில்
• முதலாவதாக இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பாக, இலங்கையின் பெரும்பான்மை அரசியல் கட்சிகள் இரண்டும் ஒற்றையாட்சி முறைமையின் கீழேயே அரசியல் தீர்வு என்று கூறியிருக்கும் நிலையில் தமிழ் மக்களின் அபிலாசைகளை உள்ளடக்கும் வகையில் எவ்வாறான அரசியல் தீர்வொன்றை நோக்கி நீங்கள் முன்னெடுக்கவுள்ளீர்கள்,
• எமது அயல் நாடான இந்தியா 13ஆம் திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதன் மூலமாகவே தீர்வு என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கும் நிலை­யிலும் மற்றும் சர்வதேச சமூகம் 13ஆம் திருத்தச்சட்டத்தை மேலும் வலுவடையச் செய்வதன் மூலமான ஒரு அரசியல் தீர்வை பரிந்துரைத்திருக்கும் நிலையிலும் அதற்கு மேலான கோசங்கள் நடைமுறை சாத்தியமானவையா? இவ்விடயங்கள் தொடர்பாக தங்கள் கட்சியினால் எடுக்கப்பட்ட, எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் என்ன?
• போர்க்கால நடவடிக்கைகளினால் சர்வதேச, உள்ளக போர்க்குற்ற விசாரணைகள், வடகிழக்கில் நிலைகொண்­டுள்ள படையினர் வெளியேற்றம் அல்லது குறைப்பு, படையினர் வசம் உள்ள தனியார் காணிகள், யுத்தகாலத்தில் காணாமல்போனவர்கள், சிறைகளில் வாடும் போராளிகள் தொடர்பாக? தங்கள் கட்சியினால் எடுக்கப்பட்ட, எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் என்ன?
இந்த விடயங்கள் தொடர்பாக இதில் கலந்துகொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் முதன்மை வேட்பாளர் டக்ளஸ் தேவானந்தா, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் வேட்பாளர் வி.மணிவண்ணன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் முதன்மை வேட்பாளர் இ.த.விக்னராஜா, மக்கள் விடுதலை முன்னணியின் முதன்மை வேட்பாளர் இ.சந்திரசேகரன், அகில இலங்கை தமிழர் மகாசபையின் முதன்மை வேட்பாளர் கே.விக்னேஷ்வரன், ஜனநாயகப் போராளிகள் அமைப்பின் சுயேட்சைக்குழு முதன்மை வேட்பாளர் என்.வித்தியாதரன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்fis தெரிவித்தனர் அவர்களின் கருத்துக்களின் காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளன.





No comments:

Post a Comment