August 10, 2015

ஐ.நா.வின் விசாரணை அறிக்கையில் 2 சிவில் பிரதிநிதிகளும் 43 இராணுவ அதிகாரிகளும் தவறிழைத்துள்ள தாக குறிப்பு!

ஐ.நா.வின் விசாரணை அறிக்கையில் இரண்டு சிவில் பிரதிநிதிகளும் 43 இராணுவ அதிகாரிகளும் தவறிழைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது என்று
நோர்வேயின் எரிக்சொல்ஹெம் தகவல் வெளியிட்டுள்ளார். என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் ஐ.ம.சு. கூட்டமைப்பின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.எனவே முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பாதுகாப்பு செயலாளர், உட்பட இராணுவ அதிகாரிகளை பாதுகாக்க வேண்டுமானால் தேர்தலில் மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்கும் வகையில் மக்கள் வாக்களிக்கவேண்டும் என்றும் அவர் கோரினார்.
கொழும்பு, ஹில்டன் ஹோட்லில் நேற்று நடைபெற்ற ஊடகவிலயாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.ஊடகவியலாளர்களான, லசந்த விக்கிரமதுங்க, பிரதீப் எக்னெலியகொட ஆகியோரது கொலையுடன் தொடர்புடைய முக்கிய சூத்திரதாரி தற்போதைய அமைச்சரவையிலேயே அங்கம் வகிக்கின்றார். அவரது பெயரை குறிப்பிட
முடியாதுதமிழ் தேசியக்கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சி அமைக்கவே ஐக்கிய தேசியக் கட்சி முனைகின்றது. இவ்வாறு ஆட்சி அமைப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கினால் தமது தேவைகளை பெற்றுக்கொள்வதற்கு அக்கூட்டமைப்பு முயலும்.
இதனால் நாட்டுக்கு பேராபத்து ஏற்படும். விரைவில் நாடு பிரியும் நிலை உருவாகும். 13 க்கு அப்பால் சென்றால் அது சமஷ்டித் தீர்வாகவே அமையும். 13வது திருத்தத்திற்கு அப்பால் செல்வோம் என்று ஐக்கிய தேசியக் கட்சி கூறியிருக்கின்றது. அவ்வாறாயின் கூட்டமைப்பு தாம் விரும்பியதை பெற்றுக்கொள்ளவே முயலும்.ஐ.நா. அறிக்கை வெளிவரவுள்ளது. இந்த நிலையில் இந்த அறிக்கையில் இரு சிவில் பிரதிநிதிகளும் 43 இராணுவ அதிகாரிகளும் தவறிழைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக நோர்வேயின் ஹெரிக் சொல்கெஹம் தெரிவித்துள்ளார்.
இதிலிருந்து நாட்டைப் பாதுகாத்த முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பாதுகாப்பு செயலாளர், இராணுவத் தளபதி உட்பட இராணுவத்தினருக்கு தண்டனை வழங்கப்படும் நிலை காணப்படுகின்றது.எனவே 17 ஆம்திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் உருவாவதற்கு மக்கள் தீர்ப்பளிக்க வேண்டும். இதன் மூலமே அனைவரையும் காப்பாற்ற முடியும்.

No comments:

Post a Comment