ஏழாலை, மல்லாகம் பகுதிகளில் இரவு நேரத்தில் சில இளைஞர்களின் தகாத செயல்கள் காரணமாக மக்கள் நடமாட அஞ்சுவதாக தெரிவிக்கப்படுகிறது.
வீதியால் செல்பவர்களை தாக்குவது, வீடுகளுக்கு
கல்லெறிவது,
வீதியோரங்களில் உள்ள கழிவுப் பொருள்களை எடுத்து நடுவீதியில் போடுவது போன்ற நடவடிக்கைகளை குறித்த இளைஞர்கள் செய்து வருவதாக பிரதேச வாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கடந்த ஒரு வாரமாக இச்சம்பவம் இடம்பெறுவதாகவும் இதன்காரணமாக பொது மக்கள் இரவு வேளைகளில் நடமாடுவதையும் தவிர்த்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அச்சம் காரணமாக பொதுமக்கள் இச்சம்பவங்கள் தொடர்பாக பொலிஸ் நிலையம் சென்று முறையிடவும் தவிர்த்து வருகின்றனர்.
இரவு நேரத்தில் தேவையற்ற வகையில் வீதியோரங்களில் இருப்பவர்கள், நடமாடுபவர்கள் விடயத்தில் பொலிஸார் உரிய கவனம் எடுத்தால் இத்தகைய செயல்களை கட்டுப்படுத்த முடியும் என பொதுமக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

No comments:
Post a Comment